
இக்கதையின் படி ஒரு கோர முகம் கொண்ட வேதாளம் போன்ற மனிதன் ஒன்று பிரான்ஸ், பரிஸ் ஒபேரா மண்டபத்தை கலக்கியடிக்கின்றது. உண்மையில் கிறிஸ்ரைடன் எனும் அழகிய இளம் ஒபேரா பாடகியின் மீதும் அவளின் மோகனமான குரல் மீதும் காதல் கொள்ளும் இந்த வேதாளம் (உண்மையில் ஒரு மனிதன் தான்) அவளைக் காதலிக்கத் துடிக்கின்றது. கோர முகம் கொண்டாலும் ஒபேரா பாடல்களைப் பாடுவதில் இந்த முகமூடி போட்ட கோரமுகம் சிறப்பானது. முதலில் தன் ஆசை நாயகி கிரிஸ்ரைனி்ற்கு பாடல் பாடக் கற்றுக் கொடுக்க முடிவெடுக்கின்றது. அவளிற்கு பயிற்சியும் அளிக்கின்றது. அவள் மெல்ல மெல்ல ஒபெரா ஹவுசில் பெரிய பாடகியாக வர வழி சமைக்கின்றது. ஒபேராவின் பிரதான பாடகி வெளியேறவும் இவள் (Christine) முண்ணனியில் பாடவும் இந்த மர்ம முகமூடி மனிதன் காரணமாகின்றான்.
கிரிஸ்ரைன் உண்மையில் இந்த கோர உருவத்தைக் காதலிக்க வில்லை. இவள் தன் காதலனின் உதவியுடன் கோரமுக நபரை ஏமாற்ற முயல்கின்றாள். அதாவது அவனிடம் இருந்து தப்பி தன் ஆசை நாயகனுடன் வாழ விரும்புகின்றாள். ஆயினும் முயற்சி செய்யும் ஒவ்வொரு தடவையும் இவளும் காதலனும் கோர முக நபரிடம் தோற்றுவிடுகின்றனர்.
%20-%20She%20is%20still%20warm%20(200w).jpg)
உண்மையில் இந்த கோர முகமுடைய நபரின் பின்னாலும் ஒரு சோகக் கதை இருந்தது. இவனை நரகத்தின் புதல்வன் என்று பார்வையாளர்களிடம் காட்டி அதன் மூலம் சிலர் சம்பாதித்து வந்தனர். அங்கே இவனுக்கு அடி உதை தொடக்கம் சவுக்கடி வரை நடந்தது. அங்கிருந்து தப்பிய இவர் இந்த பாரிஸ் ஒபேரா ஹவுசில் ஒளிந்து கொள்கின்றான். சிறு வயதிலேயே இங்கு வந்து ஒளிந்து விட்டாலும் இங்கேயே தனது வாழ்கையின் பெரும் பகுதியைக் கழிக்கின்றான்.
1925 ல் எடுத்த திரைப்பட DVD பெறுவது கடினம் தான் எனினும் தற்போதய ரீமேக்கைப் பார்க்கலாம். கலையார்வம் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம். பிரமாண்டமான மேடையமைப்பு ஹொலிவூட் படம் என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துகின்றது.
படத்தின் கணிசமான பகுதி பாடல்களாகவே நகர்கின்றன (ஒபேராப் பாணியிலான பாடல்கள்). உதாரணத்திற்கு ஒரு வீடியோ போட்டுள்ளேன் பாருங்கள். இந்தப் பாடலில் முகமூடி மர்ம மனிதன் அல்லது அந்த கோர முகமுடைய மனிதன் தன் பாடல் வலிமையால் நாயகியை மயக்கி தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கின்றான். செல்லுமிடங்களில் படத்தின் பிரமாண்டத்தைக் காணலாம். குகைகள் போன்ற அமைப்புகளூடு இவன் தன் இரகியப் பிரதேசத்திற்கு நாயகியை அழைத்துச் செல்கின்றான். இந்தப்பாடல்தான் எனக்கு இந்தப் படத்தில் மிகப்பிடித்த பாடல். இந்தப் பாடலின் பெரும்பகுதி இருட்டாகத் தெரிந்தாலும் சற்றே உற்றுப் பாருங்கள். அழகிய பிரமிக்க வைக்கும் பின்ணணிக் காட்சிகளைக் காணலாம்.
கட்டாயம் நேரம் கிடைத்தால் இப்படத்தை பாருங்கள். ஒரு கலைத் தாகம் தணித்த சுகம் கிடைக்கும். நீங்கள் தமிழ் திரைப்படங்களிலேயே பாடல்களை வெறுப்பவராயின் இது உங்களுக்கு உரிய படம் இல்லை.
Nice film majaresaan. I watched it in Frace. Its amazing..
பதிலளிநீக்குநன்றி குமரன் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.
பதிலளிநீக்குநன்றி குமரன் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்..
பதிலளிநீக்குஇதில இன்னொரு முக்கியமான் விசயம் என்னவெண்டால், பெரும்பாலும் படத்தில் நடித்தவர்களே -- முக்கியமாக phanthomமும் நாயகியும் -- படத்தில் வருகிற பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்!!
பதிலளிநீக்குஇன்னுமொன்று: இந்தப் படம் "musical"என்ற வகைக்குள் வருகிறது; இதிலஎன்ன பகிடியெண்டால் பெரும்பாலான இந்தியப் படங்கள் இங்கே வட அமெரிக்காவில் வெளியிடப்படும்போது "musical" என்ற முத்திரை குத்தப்பட்டுத்தான் வருகிறது.
//பெரும்பாலான இந்தியப் படங்கள் இங்கே வட அமெரிக்காவில் வெளியிடப்படும்போது "musical" என்ற முத்திரை குத்தப்பட்டுத்தான் வருகிறது. //
பதிலளிநீக்குதகவலிற்கு நன்றி சின்னத்தான்.
இந்தியப்படங்கள் மியூசிக்கா??? சிரிப்புத்தான் வருகின்றது....