திங்கள், பிப்ரவரி 26, 2007

21 : ஆஸ்கார் விருது முடிவுகள் வெளியானது!!!

Your Ad Here

ஆஸ்கார் விருதுகளின் முழுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் த டிபாட்டட் (The Departed) எனும் படம் சிறந்து படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. த டிப்பார்ட்டன் திரைப்படம் நான்கு ஆஸ்கார் விருதுகளை அள்ளியுள்ளது.

வேற்று மொழிக்கான சிறந்த திரைப்பட விருதை ஜேர்மானிய திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.அடுத்த பதிவில் விரிவான தகவல்களைத் தருகின்றேன்.

மேலதிக தகவல் பிபிசி தளத்தில்.

லேபிள்கள்: , ,

வியாழன், பிப்ரவரி 22, 2007

20 : 79 ம் ஆஸ்கார் விருதுகள் (79th Annual Academy Award)

Your Ad Here

பெப்ரவாரி 24 ம் திகதி ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இரண்டு கறுப்பின நடிகர்களின் பெயர் (Will smith, Forest) பரிந்துரைக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடையமாகும்.

மேலும் Babel, The Departed, Letters from Iwo Jima, Little Miss Sunshine, The Queen ஆகிய படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. லயர்னாடோ டிக்காப் ப்ரியோ நடித்த படம் The Departed பரிந்துரைக்கப் பட்டுள்ளதுடன் அவரும் சிறந்த நடிகர் பிரிவில பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.

வேற்று நாட்டுப் படங்கள் பிரிவில் இந்தியப் படங்கள் எதுவும் இல்லை கனேடிய, மெக்சீக்கன், அல்ஜீரியா, டென்மார்க் பிரதேசப் படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நடக்கப் போவதை பொறுத்துத்தான் பார்ப்போமே!!!

மேலும் அறிய

லேபிள்கள்: , ,

செவ்வாய், பிப்ரவரி 20, 2007

19 : 1 மில்லியனுக்கு தலைமுடி ஏலம்

Your Ad Here
அண்மையில் அமெரிக்காவின் பிரபல ஆங்கிலப் பாடகி பிரட்னி ஸ்பியர்ஸ் தலை முடியை வெட்டி மொட்டையாகத் திரிந்தது யாவரும் அறிந்ததே. இப்போது வெட்டப்பட்ட தலைமுடியை ஏலத்தில் விட உள்ளார்கள்.

சரி உங்களுக்கும் என்ன வாங்கலாம் போல உள்ளதா? அப்போ வாங்கலாம் போல உள்ளதா விலையைக் கேளுங்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்.

ஒரு வெப்தளத்திலேயே ஏலம் இட்டுள்ளனர். அதில் இது வாழ்க்கையில் பெரிய சந்தர்ப்பம் என்று கூறியுள்ளனரப்பா!!! Laughing 2



தளத்தைச் சென்று பார்த்துவிட்டு வாருங்கள்....





லேபிள்கள்: ,

18 : Shrek the Third வெளிவர உள்ளது

Your Ad Here

சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்த்த அனிமேசன் திரைப்படம்தான் ஷிரேக் (Shrek). ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளி வந்துள்ள வேளையில் இப்போது ஷிரெக் மூன்றாம் பாகமும் (Shrek the Third) வெளிவர உள்ளது.

18 ம் திகதி மே மாதம் இந்தத் திரைப்படம் வெளியிடப் பட உள்ளது. இங்கு fபியோனாவின் அப்பாவான அரசர் நோய்வாய்ப் படுகின்றார். இதனால் ஷிரெக் அரசருக்கு அடுத்த வாரிசைக் கண்டு பிடிக்க வேண்டும் அல்லது அவர் புதிய அரசனாக வேண்டும். இவ்வேளையில் வில்லன் கூட்டமும் அரசைக் கைப்பற்ற முயல்கின்றது. பின்னர் என்ன நடக்கின்றது என்பதை திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலதிக தகவலுக்கு உத்தியோக பூர்வ தளத்தைப் பார்க்கவும்.

லேபிள்கள்: , ,

திங்கள், பிப்ரவரி 19, 2007

17 : ஹரிபோட்டர் சாக வேண்டுமாம்

Your Ad Here


ஹரி போட்டர் திரைப்படத்தில் ஹரியின் வேடத்தில் நடித்த Daniel Radcliffe தான் ஹரி போட்டர் கடைசிப் புத்தகத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தன் பாத்திரம் இந்தப் பாகத்துடன் கொல்லப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதே வேளை ராவ்லிங் Harry Potter and the Deathly Hallows என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளதும் இது ஜூலை 21 வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ராட்கிளிஃப் இது வரை வெளிவந்த நான்கு ஹரி போட்டர் படங்களில் நடித்துள்ளதுடன் அடுத்து வரும் 3 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இறுதிப் பாகத்தில் ஹரி இறப்பதாகவே ராவ்லிங் எழுதி இருப்பார்.. அத்துடன் ஒரு சோகமான காட்சியுடன் நான் இறப்பதாக திரைப்படம் அமையும் என்று நம்புகின்றேன்" என்று கூறினார்.

பார்ப்போம் கடைசிப் புத்தகத்தில் ஹரி இறக்கின்றாரா என்று!!!!

லேபிள்கள்: , ,