சனி, ஜூன் 27, 2009

X-Men Origins: Wolverine (2009) விமர்சனம்

நம்மில் பலரும் சிறுவயதில் X-MEN கார்ட்டூன்களை தொலைக்காட்சியில் பார்த்து இரசித்தோம். அப்போது பல தடவை பிரத்தியோக வகுப்புகளை எல்லாம் கட் அடித்துவிட்டு இந்த கார்ட்டூன் தொடரைப் பார்த்தமை இன்றும் நினைவிருக்கின்றது. பின்னர் இந்த X-MEN திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. முதல் பாகம் நன்றாக வெற்றிபெறவே இரண்டாம், மூன்றாம் பாங்களையும் வெளியிட்டு வசூலை அள்ளிக்கொண்டனர் ஹொலிவூட் மக்கள். X-MEN எனப்படுபவர்கள் மரபணு விகாரத்தால் சாதாரண மனிதர்களை விட வித்தியாசமான சக்தி கொண்டவர்களாக இருப்பர். இதில் எனக்குப் பிடித்த எக்ஸ்-மென் பாத்திரம் வூல்வரின். முஷ்டியை மடகினால் முஷ்டிக்கூடாக மூன்று கத்தி வெளியே வரும். ஆகா...! என்ன ஒரு ஹீரோ. இந்த எக்ஸ-மென் தொடரில் ஒரு பாத்திரமாக வூல்வரினின் வாழ்க்கையை இந்த திரைப்படம் காட்டுகின்றது. உண்மையில் இந்த திரைப்படம் முதலாம் பாகமாக வெளிவந்திருக்க வேண்டும்.



வூல்வரினாக ஹியூஜ் ஜக்மன் நடித்திருந்தார். இவரை பல திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உதாரணமாக வன் ஹெல்சிங் போன்ற திரைப்படங்கள். சில வாரங்களுக்கு முன்புதான் இலங்கையின் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது. ஒரு நட்புவட்டம் திரைப்படம் பார்க்க சொல்லி அழைப்பு வர அதனுடன் தொத்திக்கொண்டு லிபர்ட்டி சினிமாவில் உட்கார்ந்து திரைப்படத்தைப் பார்த்தேன்.
















காமிக்ஸ் புத்தக உறை
முதலிலேயே வூல்வரின் ஒரிஜின்ஸ் காமிக்ஸ்களை வாசித்திருந்தேன். அதே கதையை எதிர்பார்த்து திரைப்படம் தொடங்கும் போது காத்திருந்தேன். ஆகா..! என்ன ஒரு ஏமாற்றம், காமிக்ஸ் கதைக்கும் திரைப்படக் கதைக்கும் வெகு தூரம். காமிக்ஸில் இழையோடும் அருமையான காதல் கதையை கத்தரித்து விட்டார்கள்.

சரி காமிக்ஸை மறந்துவிட்டு திரைப்படத்தைப் பார்ப்போம் என்று பார்க்கத்தொடங்கினேன்.

கனடாவில் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. தனது தந்தையை கொலை செய்தவனை கொலைசெய்துவிட்டு தப்பி ஒடுகின்றார் நம்ம லோகன். அவர்தான் பெரியவராகி பின்னாளில் வூல்வரின் ஆகின்றார். இவருடன் சேர்ந்து ஒடுகின்றார் அவரின் சகோதரன் (half brother). இந்த அரைவேக்காடுதான் பின்னாளில், வூல்வரினின் பரம எதிரியான சைபரூத்.

மரணம் ஏற்படாத வூல்ரினும் அவர் சகோதரனும் பல்வேறு அமெரிக்க யுத்தங்களில் பங்குபெறுகின்றனர். பின்னாளில் இவர்கள் ஒரு அதிகாரியினால் பயன்படுத்தப்படுகின்றார். வூல்வரின் எலும்புகளை உருக்கி அதற்குப் பதிலாக உலோகம் போன்ற பொருளை பொருத்தி வூல்வரினை பலமான ஒரு மனிதனாக மாற்றுகின்றனர். இந்தக் கதையை ஏற்கனவே முந்தய திரைப்படங்களில் பிட்டு பிட்டாக காட்டினார்கள். காமிக்ஸ் இரசிகர்கள் இந்தப் பாகத்தை X Weapon எனும் தொடரில் இரசிக்கலாம்.

திரைக்கதை சுமார், special effects அருமை. இந்த திரைப்படம் உங்களை ஏமாற்றாது, ஆனால் நல்ல திரைப்படம் என்று உறுதியளிக்கவும் முடியாது. நீங்கள் என்னைப்போன்ற X-MEN அல்லது Wolverine பைத்தியம் என்றால் கட்டாயமாக இந்த திரைப்படத்தைப் பார்க்கவும்.

கொசுறுத் தகவல்: திரைப்படம் முடிந்தவுடன் எழுந்து வந்துவிடாதீர்கள். எழுத்தோட்டம் முடிந்தபின்னர் ஒரு சிறய காட்சியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும் போது இன்னுமொரு திரைப்படம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

2 கருத்துகள்:

  1. வாங்க தலை,

    நீண்ட நாள் கழித்து வந்து இருக்கீங்க.

    நீங்க சொன்னது போல காமிக்ஸ் கதைக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் எந்த காமிக்ஸ் படம்தான் அந்த காமிக்ஸ் கதையை போல எடுத்து இருக்காங்க?

    நான் ஒரு தீவிர ரசிகன் என்பதால் பார்த்தேன். இந்த தொடருக்கும் அடுத்தடுத்த பாகங்கள் வரும் என்றே நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி விஷ்வா.
    ஆமாம் அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கின்றேன்.

    அது சரி, காமிக்ஸ் கதையில் மிக குறைவாக ஆக்ஷன் காட்சிகளே இருக்கும் ஆனால் கதை பலமானது. திரைப்படத்தில் எதிர்மாறாக இருக்கின்றது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ;)

    பதிலளிநீக்கு