சனி, மார்ச் 15, 2008

BEOWULF - விமர்சனம்

Your Ad Here
BEOWULF என்ற திரைப்படத்தைப் பார்க்க கிடைத்தது. படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதுதான் திடீர் என்று உறைத்தது, அட.. இது அனிமேஷன் திரைப்படம். என்னானாலும் பார்ப்பது என்ற முடிவுடன் பார்த்தேன். திரைப்படம் முடிந்த பின்னர் யோசித்துப் பார்த்தால், ஒரு அனிமேஷன் திரைப்படம் பார்த்த உணர்வே இல்லை. ஏதோ உண்மையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வே மேலோங்கி இருந்தது.

கதை அம்புலிமாமா கதைதான். ஒரு ஊரில் ஒரு இராட்சத ஜந்து இருக்கின்றது. அது ஊருக்குள் புகுந்து கொலைகளைச் செய்கின்றது, மனிதரை சப்பி சப்பிச் சாப்பிடுகின்றது. இதை தடுக்க முடியாமல் மன்னன் கலக்கமடைந்து இருக்கின்றார்.

வழமைபோல ஜந்தை அடக்க கடல்தாண்டி வருகின்றார் நாயகன் பியோவூல்ஃப். ஒருநாள் இரவு ஜந்தை மடக்கி அதனுடன் சண்டைபோட்டு அந்த ஜந்தை வெற்றிகொள்கின்றார். இதனால் கோவம் அடையும் அந்த ஜந்தின் தாயார், ஊரினுள் புகுந்து அங்கிருந்த பியோவூல்ஃப்இன் வீரர்களை கொலை செய்கின்றது.

தாய் ஜந்தை பழிவாங்க அதன் குகைக்குள் நுழையும் பியோவூல்ஃப் அங்கே ஒரு வீரன் செய்ய்க் கூடாத செயல்களை செய்வதுடன், எதிர்காலத்தில் தன்னை பெரிய அரசனாக மாற்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார். இதையறியாத மன்னன் இவரை அரசனாக்குவதுடன் தன்னை மாய்த்துக் கொள்கின்றான்.

காலம் ஓடுகின்றது, மீண்டும் இவரால் உருவான புதிய ஜந்து ஒன்று (இம்முறை ட்ரகன்) ஊரினுள் புகுந்து அட்டகாசம் செய்கின்றது. இதை தற்போதைய மன்னனான பியோவூல்ஃப் எதிர்க்கின்றார். என்ன ஆனது என்பதுதான் மிகுதிக் கதை.

அனிமேஷன் அட்டகாசமாக இருக்கின்றது. அதைவிட அம்மா ஜந்து உண்மையில் ஒரு அழகான பெண். இதில் அஞ்சலீனா ஜூலி அந்தப் பாத்திரத்தை நடித்துள்ளார்.



குளந்தைகள் விரும்பி பார்க்கூடி திரைப்படமாயினும், அவர்களை திடுக்கிட வைக்கும் காட்சிகளும் இருக்கின்றது. PG 13 என்று தரப்படுத்தியிருக்கின்றார்கள். சிறுவர் போல மனம் கொண்டவர்களும், அனிமேஷனில் மனதைப் பறிகொடுத்திருப்பவர்களும் இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம்.

அனிமேஷனில் இத்தனை வித்தைகள் செய்யலாம் என்று கலக்கியிருக்கின்றார்கள். ஜந்துகளுடனான யுத்தம் புல்லரிக்க வைக்கின்றது.

பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

லேபிள்கள்: ,

3 கருத்துகள்:

Anonymous பெயரில்லா கூறியது…

இந்தப்படத்தில் நீங்கள் கூறியது போன்று அனிமிஷன் பெரிதாக இல்லை... சரியான சப்பையாகவே உள்ளது.....

12:17 AM  
Blogger Jay கூறியது…

டோய்... அடங்குடா~!!!

10:28 AM  
Blogger Subash கூறியது…

பிடித்த படம் மயு
2 தரம் பார்த்தேன்.
நல்ல விமர்சனம். மீண்டும் சண்டைக்காட்சிகளை பார்க்கலாம்.
மிக்க நன்றி

10:57 PM  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு