வியாழன், மார்ச் 27, 2008

13 : The Last Samurai (2003) (திரைவிமர்சனம்)

Your Ad Here

சாமுறாய் பற்றி தெரியாமல் யாரும் இருக்க முடியாது. இவர்கள் ஜப்பானிய அரச பரம்பரையின் விசுவாசமான காவலர்கள். இவர்களின் கலைகள் பாரம்பரியங்கள் மிகவும் வினோதமானது என்பதைவிட மிகவும் பயங்கரமானது என்று கூடச்சொல்லலாம். இந்தத் திரைப்படத்தின் கதை கூட இந்தப் பாரம்பரிய வீரர்களின் நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றை துல்லியமாகக் காட்ட முனைகின்றது.

They say Japan was made by a sword. They say the old gods dipped a coral blade into the ocean, and when they pulled it out four perfect drops fell back into the sea, and those drops became the islands of Japan. I say, Japan was made by a handful of brave men. Warriors, willing to give their lives for what seems to have become a forgotten word: honor.

மேற்கண்ட நரேஷனுடன் திரைப்படம் ஆரம்பமாகின்றது.....

இந்த திரைப்படத்தின் கதையில் செவ்விந்தியருடன் போராடிப் பல களங்களில் வெற்றி பெற்ற அமெரிக்க கப்டனான நாதன் அல்கரென் (Tom Cruise) என்பவரைக் காட்டுவதுடன் ஆரம்பமாகின்றது. இவர் பல களங்களில் பாரம்பரிய செவ்விந்தியர்களைக் கொன்றதுடன் அதனால் மனரீதியாக கடுமையாக உளைச்சல் அடைகின்றார். குறிப்பாக செவ்விந்தியக் குளந்தைகள் பெண்கள் போன்றவர்களை கட்டளையை நிறைவேற்றும் ஒரே நோக்கத்துடன் கொன்றமை இவரின் மனதில் ஆறாத வடுவாக மாறி தினமும் கெட்ட கனவுகளைக் காணுமளவிற்கு வழிசமைத்தது. இதனால் இதிலிருந்து விடுபட பெரிய குடிகாரராக இவர் மாறிவிட்டிருந்தார்.

இதே வேளை ஜப்பானிய அரசு மேலைத்தேய கலாச்சாரத்தை உள்வாங்கி தமது புதிய படைகளை அமைக்க முயல்கின்றது. இதற்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு இந்த அல்Gரன்னிற்கு கிடைக்கின்றது. அதாவது கூலிக்கு மாரடிக்கும் ஒரு வீரனாக அல்கரன் ஜப்பானிற்குச் செல்கின்றார்.

ஆயினும் இந்த முயற்சியானது ஜப்பானின் பாரம்பரிய நெறிமுறைகளைக் குழிதோண்டிப் புதைத்து விடுவதுடன் காலாகாலமாக மன்னனிற்கும் மண்ணிற்கும் தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றி வந்த சாமுறாய்களை புறக்கணிப்பதாகவும் அமைந்தது. இது சாமுறாய்களிற்கு பெரும் மனவேதனையாகவும் ஏமாற்றமாகவும் இருக்கவே இவர்கள் ஜப்பானிய அரசனிற்கு எதிராக புரட்சி செய்யத் தலைப்படுகின்றார்கள்.

இதே வேளையில் ஜப்பான் சென்ற அல்Gரன் மற்றும் பல அமெரிக்கர்கள் சாமுராய்களை எதிர்க்க ஜப்பானிய தேசியப் படைக்கு பயிற்சி அளிக்கின்றார்கள். பயிற்சி நிறைவேறும் முன்னரே சாமுராய்களை எதிர்க்க இந்தப் படையைப் பயன்படுத்த மேலிடம் முடிவு செய்கின்றது. அல்Gரன் இதை கடுமையாக எதிர்த்தபோதும் கட்டளைக்குப் பணிய வேண்டிய ஒரு சிப்பாயாக இந்தக் கட்டளையை ஏற்று அரசனின் படையை மூடு பனி நிறைந்த காட்டுப் பாதையில் வழி நடத்திச் செல்கின்றார். இங்கேதான் எதிர்பார்க்காத சம்பவம் நடைபெறுகின்றது.

திடீரென வரும் சாமுராய்கள் வெறி பிடித்தவர்கள் போல ஜப்பானியப் படையிரரைத் தாக்குகின்றனர். கொஞ்சமும் பயிற்சி இல்லாத ஜப்பானியப் படையினர் அல்ரெனின் கட்டளைப் படி நடக்காமல் தம் இஷ்டத்திற்கு ஒடுகின்றனர். இதன் போது அலரெனின் அமெரிக்க நண்பர் இறப்பதுடன் அல்Gரென் சில சாமுறாய்களால் சூழப்படுகின்றார். தன்னால் இயலுமானவரை கடுமையாக போரிடும் அல்ரென் இறுதியில் சோர்ந்து நிலத்தில் விழவே சாமுறாய் தலைவரான கட்ஷூமோட்டோவால் சிறையெடுக்கப்பட்டு அவர்களது தொலை தூரக் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். இந்தச் சண்டையில் சாமுறாய்கள் பாரம்பரிய முறைகளையே பயன்படுத்துகின்றனர் அதாவது வாள் ஈட்டி, அம்பு வில் என்பனவே. ஜப்பானியப் படையிடம் நவீன அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்கள் இருந்தும் அவர்களால் சாமுராய்களை எதிர்க்க முடியவில்லை.

தொலைதூரக் கிராமத்தில் சிறைப்படும் அல்Gரன் சாமுறாய்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றார். அத்துடன் மெல்ல மெல்ல சாமுறாய்களின் போர்க்கலையுடன் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கின்றான். இவனை முதலில் அடித்து வீழ்த்தியவரிடமே வாள் பயிற்சி எடுக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்கின்றான் அல்Gரன். இவர்களின் நேர்மை, கட்டுக்கோப்பு, நியாயம், தியாகம் என்பவற்றைப் புரிந்து கொள்கின்றான். சாமுறாய்களின் தலைவனான கட்ஷூமோட்டோவின் நல்ல நண்பனாகவும் மாறுகின்றான்.


இதே வேளையில் கதையில் மெல்ல மெல் இளகிய காதலும் இங்கு இழையோடுகின்றது (இது இல்லாமல் ஒரு படம் எடுக்க மாட்டேங்கிறாங்களே!). கட்ஷூமோட்டோவின் சகோதரியின் பராமரிப்பிலேயே காயபப்பட்ட அல்Gரன் இருக்கின்றான். இவளின் துணைவனைக் களத்திலே கொன்றது அல்Gரன் தான். முதலில் அல்Gரன் மீது கடும் வெறுப்பிருந்தாலும் இருவரும் இறுதியில் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர் குறிப்பாக இவளின் மூத்த குளந்தையும் அல்Gரன் மேலே அளவு கடந்த பாசம் வைக்கின்றது. இவர்களின் காதல் அவ்வளவு விளக்கமாகக் காட்டப்படாவிட்டாலும் படிப்படியாக வளர்வதைக் காட்டியுள்ளார்கள்.


இறுதியில் சாமுறாய்களும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட புதிய ஜப்பானியப் படைகளும் மோதுகின்றன. முடிவை விமர்சனத்தில் சொல்வது அழகல்லவே அதனால் நான் சொல்லவில்லை ஆயினும் திரைப்பட முடிவு கண்கலங்கவைக்கும் காட்சிகள் நிறைந்தது. அத்துடன் கதிரையின் நுனியில் உட்காரவைக்கும் கடும் யுத்தக் காட்சிகளும் நிறைந்தது. அடிப்படையில் விவசாயம் செய்தவர்களான ஜப்பானியப் படையினர் இறுதிக் கட்டத்தில் தலைசாய்த்து வீழ்ந்த சாமுராயை வணங்குவது உணர்ச்சிப் பிழம்பான கட்டமாகும்.


நடிப்பைப் பொறுத்தவரையில் டாம் குறூஸ் மற்றும் கட்ஷூமோட்டாவாக நடித்த (Ken Watanabe) அதைவிட கட்ஷூமோட்டோவின் சகோதரியாக நடித்த (Koyuki), ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

இத் திரைப்படத்தில் ஜப்பானியர்களின் கலாச்சாரத்தை இயன்றவரை சிறப்பாகப் படமாக்க முயன்றுள்ளர்கள். ஜப்பானிய வீடுகள் பிரித் ஓதும் பிக்குகள், பெளத்த விகாரைகள், மாளிகைகள், ஜப்பானியத் துறைமுக நகரம் போன்றவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


ஆக மொத்தத்தில் ஆங்கிலப்படம் ஒன்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டால் பார்த்து இரசிக்கக் கூடிய படங்களில் ஒன்று. பார்ப்பவர்களை இந்தப்படம் ஏமாற்றாது என்று நான் உறுதி வழங்குகின்றேன்.

9 கருத்துகள்:

Blogger கானா பிரபா கூறியது…

வணக்கம் மயூரேசன்

நன்றாகப் பதிந்திருக்கிறீர்கள், சாமுராய் படங்களைப் பார்ப்பதே தனி இன்பம்.
இதோ அகிரா குரொசவாவின் "ஏழு சமுராய்க்கள்" பற்றிய என் பதிவு

http://kanapraba.blogspot.com/2005_12_01_kanapraba_archive.html

11:05 AM  
Blogger Jay கூறியது…

உங்கள் பதிவை வாசித்தேன்!
வரவிற்கும் கருத்திற்கும் நன்றி!!!

1:05 PM  
Blogger romba super கூறியது…

nalla vimarsanam aarumai bala sir

9:34 PM  
Blogger Jay கூறியது…

ஆகா.. என்னை பாலா சார் ஆக்கிட்டீங்களே!!!!

9:42 PM  
Blogger பாலா கூறியது…

அருமை மயூரேசன்! :-) கலக்குங்க!

உங்களை ‘பாலா’ ஆக்கிட்டாங்களே! :-( :)

6:01 AM  
Blogger Jay கூறியது…

@பாலா
ஹி.. ஹி.... என்னையும் உங்களைப்போல பெரிய ஹாலிவூட் விமர்சகர் என்று அவர் நினைத்திட்டார் போல!! ;)

9:18 AM  
Blogger butterfly Surya கூறியது…

நன்றி மயூரேசன்

11:49 AM  
Blogger பாலா கூறியது…

//உங்களைப்போல பெரிய ஹாலிவூட் விமர்சகர்//

இந்த லொல்லுதானே வேணாங்கறது. :) :) :) :)

6:38 PM  
Blogger Jay கூறியது…

ஹி...ஹி...
உண்மைய சொன்னா நக்கலென்றீங்களே!!! ;)

8:15 PM  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு