ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

Australia (2008) விமர்சனம்

Your Ad Here

ஒரு நாட்டில் பெரும்பாண்மையாக இருப்பவர்கள்தான் அந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்று ஒரு கருத்து சில ஆமைகள் மத்தியில் நிலவுகின்றது. அவ்வாறு இல்லை என்பதற்கு நம் கண்முன்னே விரியும் சாட்சிதான் தற்போதைய அவுஸ்திரேலியா. அபரோஜினல் இனத்தவரே அவுஸ்திரேலியாவின் பூர்வீக குடிகள். வந்து குடியேறிய ஜரோப்பியர் இவர்களின் அடையாளத்தை அழிக்கும் பணியில் வலும் ஆர்வமாக ஈடுபட்டனர். இந்த திரைப்படத்தின் கதை ஒரு அபரோஜினோ சிறுவனை சுற்றி நகர்கின்றது. கறிக்கு மிளகாய், வெங்காயம், மிளகு போன்றவை சேர்ப்பது போல உலக யுத்தம் போன்ற சில பல விடையங்களும் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பூர்வீக குடியைச் சேர்ந்த தாய்க்கும் வெள்ளையின தறுதலை ஒன்றிற்கும் பிறக்கும் இரண்டும் கெட்டான் சிறுவன் நல்லாவே திரைப்படத்தின் மையம். இவனை சுற்றி ஒரு பக்கத்தில் ஒரு வெள்ளைக்கார காதலையும் அரங்கேற்றுகின்றார்கள் ஹொலிவூட் காரர்கள்.


வட அவுஸ்திரேலியாவில் கதையின் பெரும் பாகம் நகர்கின்றது. உலக யுத்தம் அதன் தாக்கம் பற்றி கதைத்தவாறே திரைப்படம் ஆரம்பித்தாலும் கதை சுழன்று அபரோஜினோ சிறுவன் நல்லாவை நோக்கி திரும்புகின்றது.

அவுஸ்திரேலியா சென்று மாட்டுப் பண்ணை நடத்தும் கணவனை மீள இங்கிலாந்து அழைத்துவர சீமாட்டி ஆஷ்லி அவுஸ்திரேலியா புறபடுகின்றார். அவுஸ்திரேலியாவின் டார்வின் எனும் நகரை வந்து சேரும் இவரை அவரது கணவரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ட்ரோவர் அழைத்து செல்வதாக முடிவாகின்றது. வந்து சேரும் சாரா, ட்ரோவரை பெரும் அடி தடி மயிர்பிடி சண்டை மத்தியில் சந்திக்கின்றார்.

இவ்வாறு பல சாகங்களுடன் கணவனின் இடத்தை (Faraway Downs) அடைகின்றார் ஆஷ்லி. இங்கேதான் அபரோஜின இன சிறுவன் நல்லா மற்றும் அவனது தாயார் வசிக்கின்றனர். ஆஷ்லியின் கெட்டகாலம் அவர் வந்து சேர்ந்த நேரம் பார்த்து அவரது கணவர் மரணமாகிவிடுகின்றார் அல்லது கொலைசெய்யப்பட்டுவிடுகின்றார். அவரது கணவரது கொலைக்கு காரணம் கிங் ஜோர்ஜ் என்று அவரது கணவரின் உதவியாளர்களில் ஒருவரான ப்ளெச்சர் சொல்கின்றார். உண்மையில் அவரது கணவரில் கொலைக்கு காரணம் பிளச்சர்தான் (Fletcher), இந்த பிளச்சர் தசாவதாரத்தில் வரும் பிளச்சர் இல்லை ;)

உண்மையில் பிளச்சர் கார்ணி எனும் மற்றய ஒரு மாட்டுப்பண்ணை முதலாளியிடம் விசுவாசமாக இருந்து சாராவின் கணவரின் மாடுகளைத் திருடிவருகின்றான். இவை அனைத்தும் அபரோஜின சிறுவன் நல்லா மூலம் சாரா அறிந்து கொள்கின்றாள். இதனை அடுத்து பிளச்சரை அவனது வேலையில் இருந்தும் விரட்டி விடுகின்றாள்.

இதன் பின்னர்தான் படம் சூடுபிடிக்கத்தொடங்குகின்றது. மாட்டு வியாபாரம் அது இது என்று கதை நீள்கின்றது. இதற்கிடையே சிறுவன் நல்லாவிற்கு சாராவிற்கும் இடையில் தாய் மகன் போன்ற உறவு உருவாகின்றது. அதே போல் சாராவும் அவரை அவரது கணவரிடம் கூட்டிவந்த ட்ரோவரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கத்தொடங்குகின்றனர்.

திரைப்படத்தின் மிகப் பெரிய பின்னடைவு அதன் நீண்ட கதை. திரையரங்கில் பலரும் அவர்கள் பேசும் அவுஸ்திரேலிய ஆங்கல உச்சரிப்பு புரியவில்லை என்று முனகுவது கேட்டது. நமக்கும் அப்படித்தான், பிறகு வந்து விக்கிப்பீடியாவில் கதையை வாசித்தமாக்கும். ;)

காட்சிகள் பிரமாதம், அருமையான ஒளிப்பதிவு. கட்டாயமாக இந்த திரைப்படத்தைப் பாருங்கள். இது உங்களை ஏமாற்றாது, ஆனால் 100 திருப்திப் படுத்தும் என்று நான் வாக்குறுதி வழங்க மாட்டேன்.

லேபிள்கள்: ,

5 கருத்துகள்:

Anonymous பெயரில்லா கூறியது…

gud

10:21 பிற்பகல்  
Blogger வண்ணத்துபூச்சியார் கூறியது…

மயூரேசன் இன்னும் படம் பார்க்கவில்லை.

பகிர்விற்கு நன்றி.

வாழ்த்துகள்.

11:43 முற்பகல்  
Blogger Subash கூறியது…

நன்றி மயு.
அருமையா படத்தைப்பறி செல்லிருக்கீங்க. வெளியுர் போய் வந்து பாக்கலாமென அப்படியே வச்சிருக்கேன்.
அதற்கு முன்னரே படம் பற்றி அறியத்தந்ததற்கு மிக்க நன்றிகள்

9:46 பிற்பகல்  
Blogger யாத்ரீகன் கூறியது…

Rabbit Proof Fence paarthurukeengala ?

10:01 பிற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

பின்னூட்டங்களுக்கு நன்றி

இல்லை யாதரீகன் அந்த திரைப்படம் இன்னமும் பார்க்கவில்லை.

12:59 முற்பகல்  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு