திங்கள், பிப்ரவரி 23, 2009

ஆஸ்காரை அள்ளிய ரகுமான்

Your Ad Here

இந்தியரும் தமிழருமான ரகுமான் நடைபெற்று முடிந்த ஆஸ்கார் விருதுகளில் 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதைவிட ஸ்லம் டோக் மில்லியனர் என்ற திரைப்படம் 8 விருதுகளை தனதாக்கியுள்ளது. இதில் ரகுமானின் 2 விருதுகளும் அடங்கும். best original score and best original song - Jai Ho ஆகிய இரு விருதுகளையுமே தனதாக்கிக்கொண்டார்.

அவையில் பேசும் போது "I just want to thank again the whole crew of Slumdog Millionaire, especially [director] Danny Boyle, for giving me such a great opportunity." என்று கூறி அவையடக்கமாக இருந்தார்.

இதே வேளையில் இந்தி நடிகரான அமீர்கான், இந்திய சினிமாத்துறைக்கு கிடைத்த அங்கீகாரத்தினால் மிகவும் பரபரப்பாக இருப்பதாக சந்தோசம் வெளியிட்டார்.

"It is great to see Indian talent [in cinema] being recognised internationally. We are no less than anybody else," என்று செய்திகளுக்கு அமீர்கான் கூறினார்.

இவ்வருடத்துடன் சேர்த்து இந்தியா மொத்தம் 5 ஆஸ்கார் விருதுகளுக்குச் சொந்தக் காரன் ஆகின்றது.

2009: AR Rahman - best original score
2009: AR Rahman and Gulzar - best original song
2009: Resul Pookutty - sound mixing
1992: Satyajit Ray - lifetime achievement
1983: Bhanu Athaiya - costume design (Gandhi)

இதேவேளை இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட மாயா மாதங்கி அருட்பிரகாசம் ஒஸ்கார் விருதை எட்ட முடியவில்லை. ஆயினும் ஆஸ்கார் விருதுகளில் பரிந்துரைக்கப்படுவது என்பதே மிகப்பெரிய விடையம்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு