ஞாயிறு, ஏப்ரல் 19, 2009

Punisher: War Zone (2008) - விமர்சனம்

Your Ad Here

காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை விசயகாந்த் தீவிரவாதிகளை துரத்தி துரத்தி சுடுவது போல இந்த பனிஷர் சமூகவிரோதிகளை துரத்தி துரத்திச் சுடுகின்றார். மார்வல் காமிக்ஸ்கதைப் பாத்திரத்தை மையமாக கொண்டி இந்த திரைப்படம்எடுக்கப்பட்டுள்ளது. அதிகமாக வெட்டுக் கொத்து என்றுதிரைப்படம் நகர்கின்றது. 300 திரைப்படத்தில் எப்படி இரத்தம்கொப்பளிக்க கொப்பளிக்க கொலைசெய்வார்களோ அவ்வாறேஇந்த திரைப்படத்திலும் கொலைகள். நெஞ்சைத்திடப்படுத்திக்கொண்டே பார்க்க முடியும். Ray Stevenson சமூக விரோதிகளைத்தண்டிக்கும் ஒரு விஜிலாண்டியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் இதேதொடரில் முன்பு வந்த திரைப்படத்துடன் ஒப்பிடும் poothu மோசமாக இருப்பதாகபனிஷர் இரசிகள் குறைகூறுகின்றனர். விசயகாந்த் படம் என்று தொடக்கத்தில் கூறியதால் ஏதாவது சப்பை படம் என்று நினைத்து வைக்காதீங்க ;)ஒரு வன்முறை கூட்டத்தால் குடும்பத்தை இழக்கும் பிராங் விரக்தியின் முடிவிற்கு வந்து சமூக விரோதிகளையும் கொள்ளைக்கார குடும்பங்களையும் ஆணிவேரோடு அழிக்கின்றார். இந்தப் பயனத்தில் ஆறு வருடங்களாக இருக்கும் பிராங்கின் நடத்தைக்கு NYPD (அதாங்க.. நிவ்யோர்க் பொலிஸ் டிப்பார்ட்மென்ட்)இல் இருக்கும் சில பொலீஸ் அதிகாரிகளும் மறைமுகமாக ஆதரவு தருகின்றார்கள். இவர்கள் பலவேளைகளில் செய்ய முடியாமல் போகும் காரியம் (அதாவது நம்மூர் பொலீசு என்கவுண்டர் போடுறது) அனைத்தையும் தன் கையில் எடுத்து செய்து முடிக்கின்றார் பிராங்க். கள்வனைக் கண்டால் உடனே அவனுக்கு மரணத்தைப் பரிசளி என்பது பிராங்கின் மந்திர வாக்கு.

இவ்வாறு ஒருநாள் சில சமூக விரோத கும்பலை அடித்து துவைக்கும் போது ஒருத்தனை கண்ணாடி அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைக்கின்றார் நம்ம பணிசர். இவன் பின்னர் FBI முகவர்களால் காப்பாற்றப்பட்டு, எழும்பி வந்து வில்லனாகின்றான். முகம் கோரமான இவனுடன் மன நோயாளியான இவன் தம்பி வேறு சேர்கின்றான். இரண்டு பேரும் சேர்ந்து, கொள்ளையர்கள், கற்பழிப்பாளர்கள், என்று பலரையும் ஒரு குடையின் கீழ் சேர்த்து ஒரு பெரிய குழுவை உருவாக்குகின்றார். அவனுக்கு "Jigsaw" என்று ஒரு பெயர் வேறு.

இந்த ஜிக்சோவை தண்டிக்கும் நேரத்தில் வரும் ஒரு கொள்ளையனை பணிஷர் சுட வேண்டி ஏற்படுகின்றது. ஆனால் பின்னர் பார்க்கும் போது அவர் இந்த சமூக விரோதக் கும்பல் மத்தியில் ஒழிந்திருந்த ஒரு எப்.பி.ஜ முகவர் என்று தெரிய வருகின்றது. இந்த கொலையால் கோபமடையும் எப்.பி.ஜ முகவர் ஒருவர் NYPD உடன் சேர்ந்து பணிஷரைப் பிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்த முனைகின்றார்.

இதேவேளை பிராங் எனப்படும் பணிஷர் தான் செய்த கொலையை எண்ணி வருந்துகின்றார். இறந்த முகவரின் குழந்தை,மனைவியிடம் அன்பாக இருக்கின்றார்.மிகுதி என்ன என்பதை வெள்ளளித் திரையிலோ, டிவிடியிலோ, திருட்டு சி.டியிலோ பார்த்து மகிழ்க.

Ray Stevenson அருமையாக நடித்துள்ளார். குரோதம் நிறைந்த தீயவர்களை மன்னிக்க மறுக்கும் பாத்திரத்தில் நன்கே பொருந்துகின்றார். அப்புறம் இந்த திரைப்படத்தை யுவனுக்குப் போட்டுக்காட்ட வேண்டும். கையில் இலக்ட்ரோனிக் கிட்டார் இருக்கு என்பதனால் என்னவும் செய்யலாம் என்பது அவர் நினைப்பு. பின்னணி இசை நெஞ்சை உருகவும் உலுக்கவும் வைக்கின்றது. வன்முறை அதிகம் நிறைந்த படம் என்பதால் குழந்தைகளுடன் பார்க்க ஏற்றபடம் அல்ல.

லேபிள்கள்: ,

4 கருத்துகள்:

Blogger King Viswa கூறியது…

நான் இதற்கு முன்பு இல வந்த பணிஷர் படத்தை பார்த்திருக்கிறேன். ஓரளவுக்கு நன்றாக இருந்தது. ஆனால் இந்த படத்தின் டிரைலரை டி.வி.டி.இல பார்க்கும்போது லயன்ஸ்கேட் ரிலீஸ் என்று வந்தது. அலறி அடித்துக் கொண்டு ஓடி விட்டேன்.

லயன்ஸ்கேட் ரிலீஸ் செய்த படம் என்றாலே அது ஒரு டிரேட்மார்க் மொக்கை படம் என்பது எங்கள் நண்பர்களின் ஒட்டுமொத்த கருத்து (ஒரு ஐந்து படங்களை தவிர).

உங்கள் விமர்சனத்தை படித்து விட்டு அந்த டி.வி.டி.ஐ தேடிக் கொண்டு இருக்கிறேன்.

On a Lighter Note:// வன்முறை அதிகம் நிறைந்த படம் என்பதால் குழந்தைகளுடன் பார்க்க ஏற்றபடம் அல்ல// அப்போ, என்ன மாதிரி குழந்தைங்க எல்லாம் இந்த படத்த பார்க்ககூடாதா என்ன?

கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்

12:42 முற்பகல்  
OpenID Subash கூறியது…

நல்ல விமர்சனம்.
அப்பெல்லாம் விமர்சமமே வருவதில்லையே!!!

4:08 பிற்பகல்  
Blogger Subash கூறியது…

நிறைய சாளாக ஆளையே காணக்கிடை்கலையே???
என்ன நடந்துது தல?

6:52 பிற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் நன்றி.

சுபாஷ் இன்று எழுதுகின்றேன் ;)

1:00 முற்பகல்  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு