வெள்ளி, ஜூலை 11, 2008

Butterfly Effect விமர்சனம்

Your Ad Here

பட்டர்ஃபிளை எபெக்ட் என்றால் ஒரு சிறிய மாற்றமும் பெரிய ஒரு மாற்றத்தை தோற்றுவிக்க கூடிய தன்மை உடையது எனும் பொருள்பட உள்ளதை விக்கிப்பீடியா மூலம் அறிந்துகொண்டேன். அதாவது வண்ணாத்திப்பூச்சி பறக்கும் எபெக்டு பெரிய சுனாமிவரக் காரணம் ஆகலாமாம்... ஹி..ஹி..

இந்தப்பெயரில் அமைந்த திரைப்படம் பாகம் 1 மற்றும் பாகம் இரண்டு வெளிவந்துள்ளது விரைவில் பாகம் 3 வெளிவர உள்ளது.

அண்மையில் பாகம் ஒன்றை DVD இல் பார்க்க கிடைத்தது. அருமையான திரைப்படம். பார்த்து முடித்ததும் மனம் எல்லாம் கனமாகிவிட்டது. கதை இதுதான்... ...

ஒரு சிறுவனுக்கு அடிக்கடி அவனை சுற்றி நடப்பது மறந்துவிடுகின்றது. அதாவது, ஏதாவது ஒரு செயலைச் செய்ய தொடங்குவான் பின்னர் என்ன நடந்த்து என்பது அவனுக்குத் தெரியாது. உதாரணத்திற்கு ஒரு தடவை ஆசிரியர் படம் கீறச் சொல்கின்றார், படம் கீற ஆரம்பிப்பது மட்டுமே அவனுக்கு ஞாபகத்தில் இருக்கின்றது. சிறிது நேரத்தில் ஒருத்தன் பலரை கத்தியால் குத்திக் கொலை செய்தது போன்ற ஒரு படத்தை வரைந்திருந்தான். இது பற்றி அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய நிகழ்வு.

இது போன்ற நிகழ்வுகளில் ஞாபகம் தவறாது இருக்க, அன்றாடம் நடப்பவற்றை ஒரு குறிப்பாக எழுதிப்பேணி வருகின்றான்.

சிறிது காலம் கடந்து பல்கலை செல்லும் இந்தப் பெடியன் அங்கு ஒருநாள் சிறுவயதில் தான் எழுதிய நிகழ்வுகளை மீள எடுத்து வாசிக்கத் தொடங்குகின்றான். அதன் போது அவனுக்கு அனைத்தும் ஞாபகத்திற்கு வரத் தொடங்குகின்றது. அத்துடன் அந்த நிகழ்வு நடந்த பழைய காலத்திற்கு செல்ல கூடிய சக்தியும் ஏற்படுகின்றது. இந்த சக்தி மூலம் சிறுவயதில் நடந்த சில சில நிகழ்வுகளை இவன் மாற்றுகின்றான். சிறுவயதில் மாற்றிய சிறு நிகழ்வும் நிகழ்காலத்தில் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. அதாங்க பட்டர்ஃபிளை எபெட்டு.

இவனை சுற்றியுள்ளோருக்காக ஒவோரு தடவையும் இவன் பழைய காலத்திற்கு சென்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் போது அது நிகழ்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

ஹொலிவூட் காரர்கள் தமக்கே உரிய பாணியில் திரைப்படத்தை எடுத்துள்ளனர். அருமையான ஒரு Sci-fi திரைப்படம். இரண்டாம் பாகம் விரைவில் பார்க்க வேண்டும்.

லேபிள்கள்:

5 கருத்துகள்:

Blogger இவன் கூறியது…

முதலாம் பாகம் அளவுக்கு 2ம் பாகம் இல்லை மயூரேசன்.... முதலாம் படத்தில் அந்த முடிவு கடைசிவரை எதிர்பார்க்காததுதான்.... எனக்கு அந்த படம் மிகவும் பிடித்து இருந்தது

12:36 பிற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

@இவன்
இரண்டாம் பாகம் நான் இன்னமும் பார்க்கவில்லை. வழமையாக அப்படித்தான் இரண்டாம் பாகம் முதலாம் பாகம் அளவிற்கு சோபிப்பதில்லை.

1:04 பிற்பகல்  
Blogger Maniy கூறியது…

தசாவதாரம் படத்திலும் இந்த Butterfly Effect பற்றி சில வார்த்தைகள் வருகின்றன, கவனித்தீரோ?

8:48 முற்பகல்  
Blogger அறிவன்#11802717200764379909 கூறியது…

இணையத்தில் பார்க்க வழியிருக்கிறதா?

இருப்பின் சுட்டி அளியுங்கள்...

9:39 முற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

ஆமாம் பட்டர்பிளை எபெக்ட் பற்றியெல்லாம் கமல் அதில் பேசுவார்.

1:15 முற்பகல்  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு