வியாழன், ஏப்ரல் 09, 2009

The Invasion (2007) விமர்சனம்

Your Ad Here
வேற்றுக் கிரக வாசிகள் பல வேசங்களில் வந்து பூமிக்குசவால்விடும் திரைப்படங்கள் பலவற்றைப்பார்த்திருக்கின்றோம். இவ்வாறாக இது வரை வெளிவந்தஹொலிவூட்திரைப்படங்களைப் பட்டியல் போடப் போனால்அது மோசமாகநீளும். அந்த வரிசையில் ஒரு திரைப்படம். ஒருவேற்றுக் கிரகவாசியையோ அல்லுது ஒரு பறக்கும்தட்டையோ காட்டாமல் ஒரு திரைப்படம்எடுத்திருக்கின்றார்கள். இந்தக் கதையில் வேற்றுக் கிரகவாசிகளுக்குப் பதிலாகபூமிக்கு வெளியே இருந்து வரும்வைரசுக்கள் மனிதனைஆட்டிப்படைப்பதையும் அதன் மூலம் மனிதர் அடையும்பிரைச்சனைகளையும்இந்த திரைப்படம் காட்டுகின்றது.



விண்ணில் இருந்து ஒரு நாசா அனுப்பிய ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு வட்டத்தினுள் நுழைகின்றது. ஆனால் கெட்டகாலம் அந்த விண்கலம் அமெரிக்க வான் பரப்பில் உடைந்து சிதறிவிடுகின்றது. அவசரமாக அமெரிக்க அரசு அந்தப் பாகங்களை யாரும் தொட வேண்டாம் என்று கட்டளையிடுகின்றது. அவசரக்குடுக்கைகளான அமெரிக்கர்கள் அந்தப் பாகங்ளைத் தொட்டுத் தொலைக்கின்றனர். அந்த சிதறிய பாகங்களில் இருந்து வைரசுக்கள் பரவத் தொடங்குகின்றது.

சாதாரணமாக அமெரிக்க திரைப்படங்களில் வரும் வைரசுக்கள் பயங்கரமாக இருக்கும். மனிதரை இரத்த வெறிகொண்டவராக மாற்றக்கூடியவையாக இருக்கும். ரெசிடன் ஈவில் போன்ற திரைப்படங்கள் உங்களுக்கு ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் இந்த திரைப்படத்தில் வரும் வைரசுக்கள் மனிதருக்கு அப்படியொன்றும் மோசமான செயலை செய்யவில்லை. மனிதர்கள் யாவரையும் ஒரு அணியில் சேர்க்க உதவத் தொடங்குகின்றது. மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் வெறுப்பதற்குப் பதிலாக ஒருத்தரை ஒருத்தர் விரும்பத் தொடங்குகின்றனர்.

வைரசு தொற்றுக்குள்ளானவர் உடனடியாக அந்த வைரசுக்கு அடிமையாக மாட்டார். வைரசு தாக்குதலுக்குப் பின்னர் கொள்ளும் முதலாவது நித்திரையின் பின்னரே வைரசு தாக்கத்திற்கு உள்ளாவர். அத்துடன் வைரசு தாக்கத்திற்கு உள்ளானவர்கள் தம்மிடம் இருக்கும் வைரசை மற்றவர்களுக்குப் பரப்பும் முயற்சியிலும் ஈடுபடுவர்.

இத்தனை பிரைச்சனை மத்தியிலும் இந்த வைரசில் இருந்து தன் மகனைக் காப்பாற்றவும், வைரசின் பிடியில் செயற்படாமலும் இருக்க ஒரு பெண் (Nicole Kidman) எடுக்கும் முயற்சியைச் சுற்றி கதை நகர்கின்றது.

தன் முன்னாள் கணவரிடம் இருந்து வைரசை பெற்றுக் கொள்ளும் இந்த தாயார் தான் நித்திரைகொண்டால் வைரசின் தாக்கத்திற்கு அடிமையாகிவிடுவோம் என்று நித்திரைகொள்ளாமல் ஓடித்திரிவார்.

இப்படி போகும் கதையில் கிட்டத்தட்ட மனிதர்கள் தம் சுயத்தை இழக்கின்றார்கள். அதாவது ஒருத்தரை ஒருத்தர் அடித்துப் போடும் பழக்கம். இந்த வைரசின் பிடியில் இருந்து எவ்வாறு மீள்கின்றார்கள் மற்றும் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் என்ன ஆனது என்பது மிகுதிக்கதை.

கசினோ ரோயல் ஜேம்ஸ்பாண்ட் இந்த திரைப்படத்திலும் நாயகனாக நடிக்கின்றார். விறுவிறுப்பிற்கு குறைவில்லை ஆயினும் அமெரிக்க நேயர்கள் இந்த திரைப்படம் தங்களை ஏமாற்றிவிட்டதாகவே கூறுகின்றனர்.

நேரத்தைக் கொல்ல பார்க்க கூடிய ஒரு திரைப்படம்.

லேபிள்கள்: ,

7 கருத்துகள்:

Blogger King Viswa கூறியது…

தல,

இது உங்களுக்கே நல்ல இருக்கா? நீங்களே இப்படி சொன்னா //நேரத்தைக் கொல்ல பார்க்க கூடிய ஒரு திரைப்படம்// எப்படி?

இதுக்கு அப்புறம் யாராவது இந்த படத்த பார்ப்பாங்களா?

தல, ஒரே கதையை வச்சு வந்த நாலாவது படம் இது. ஆமாம், மூணாவது ரீமேக் தான் இந்த படம்.

நம்ம ஊர்ல இப்ப இருக்குற ஆளுங்க எல்லாம் ரீமேக் படம் எடுத்தா உடனே "இப்போதைய இயக்குனர்களிடம் சரக்கு இல்ல" என்று கூறுகிறார்கள்.

அமெரிக்காவை பார், அங்க எப்படி எல்லாம் எடுக்குறான் பார் என்று சொல்றவங்களுக்கு இந்த படத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்.

//அமெரிக்க நேயர்கள் இந்த திரைப்படம் தங்களை ஏமாற்றிவிட்டதாகவே கூறுகின்றனர்// தவறே இல்லை. படம் முக்கால்வாசி எடுக்கப் பட்ட பிறகு புரேட்யூசருக்கும் இயக்குனருக்கும் சண்டை. அதனால் பாக்கிய யார வச்சு எடுத்தாங்க தெரியுமா?

நம்ம மேட்ரிக்ஸ் பட இரட்டை இயக்குனர்களை வச்சு தான். ஆனாலும் படம் ஓடலை.

நல்ல முயற்சி.

தொடர்ந்து எழுதுங்கள்.

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்

11:01 PM  
Blogger Unknown கூறியது…

படம் OK, விறுவிறுப்புக்கும் குறைவில்லைத்தான். என்றாலும், நீங்கள் ஆரம்பத்தில் கூறியதுபோல, கதை பெரிசாப் புதிதில்லை, தவிர பெரிதாக திருப்பங்கள் என்றும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை -- பார்த்து ஒரு வருடத்திற்கு மேல்...

11:21 PM  
Blogger King Viswa கூறியது…

தல,

இது உங்களுக்கே நல்ல இருக்கா? நீங்களே இப்படி சொன்னா //நேரத்தைக் கொல்ல பார்க்க கூடிய ஒரு திரைப்படம்// எப்படி?

இதுக்கு அப்புறம் யாராவது இந்த படத்த பார்ப்பாங்களா?

ஒரே கதையை வச்சு வந்த நாலாவது படம் இது. ஆமாம், மூணாவது ரீமேக் தான் இந்த படம்.

நம்ம ஊர்ல இப்ப இருக்குற ஆளுங்க எல்லாம் ரீமேக் படம் எடுத்தா உடனே "இப்போதைய இயக்குனர்களிடம் சரக்கு இல்ல" என்று கூறுகிறார்கள்.

அமெரிக்காவை பார், அங்க எப்படி எல்லாம் எடுக்குறான் பார் என்று சொல்றவங்களுக்கு இந்த படத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்.

//அமெரிக்க நேயர்கள் இந்த திரைப்படம் தங்களை ஏமாற்றிவிட்டதாகவே கூறுகின்றனர்// அதி தவறே இல்லை. படம் முக்கால்வாசி எடுக்கப் பட்ட பிறகு புரேட்யூசருக்கும் இயக்குனருக்கும் சண்டை. அதனால் பாக்கிய யார வச்சு எடுத்தாங்க தெரியுமா?

நம்ம மேட்ரிக்ஸ் பட இரட்டை இயக்குனர்களை வச்சு தான். ஆனாலும் படம் ஓடலை.

நல்ல முயற்சி.

தொடர்ந்து எழுதுங்கள்.

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்

11:30 PM  
Blogger Jay கூறியது…

@மணி
ஆமாம் 2007ல் வந்த திரைப்படம். பரபரப்பு மட்டுமே திரைப்படத்தில் இருந்தது.

@கிங் விஷ்வா
ஹி..ஹி... உண்மையைத்தான் சொன்னேன் தலைவா. அப்படி ஒன்றும் விஷேஷமான திரைப்படம் அல்ல இது. சாதாரணமாகப் பார்த்து களிக்கக் கூடியதிரைப்படம்.

அப்புறம் நீங்க கொடுத்திருக்கிற சின்ன சின்ன Trivia க்களுக்கு நன்றி ;)

10:24 AM  
Blogger King Viswa கூறியது…

தல,

நீங்க சொல்றது Correctதான். அது ஒரு மகா மொக்க படம் தான்.

இருந்தாலும் நாளைக்கு (சனிக்கிழமை ஏப்ரல் பதினொண்ணாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு) அதனை HBO Channelளில் போடும்போது சில பல பேர் அதனை பார்த்து நாம பட்ட கஷ்டத்தை படட்டுமே என்ற எண்ணத்தில் தான் கூறினேன்.

வேறு ஒன்றும் இல்லை.

யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வலையுலகம்.

ஹீ ஹீ ஹீ.

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்

10:32 AM  
Blogger Jay கூறியது…

தலீவா!!!!! என்னே உன் பரந்த உள்ளம்.. புல்லரிக்குது :)

HBO வில் பார்த்து இரசிக்கலாம், DVD வேண்டி பார்க்கிறதுக்குத்தான் இந்தப் படம் இலாயக்கு இல்லை.

அப்ப வையகம் வரும் சனிக்கிழமை உங்கள் பெருமை அறியும்.

10:34 AM  
Blogger Subash கூறியது…

முந்தி பார்த்தது. அப்ப விறுவிறுவெனதான் இருந்தது. ஆனா திரும்பி பார்க்க படத்தில் ஒன்னுமில்ல.
ஆனாலும் உங்க விமர்சனம் படிக்கும்போது பழைய ஞாபகய்கள் வருது.
நன்றிகள் மயு

11:08 AM  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு