வெள்ளி, ஜனவரி 23, 2009

ஆஸ்கார் விருதுக்கு ஸ்லம் டாக் மில்லினர் : ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை

Your Ad Here
இந்தியாவில் தயாரான ஆங்கில திரைப்படம் ஸ்லம் டாக் மில்லினர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படமான ஸ்லம் டாக் மில்லினர், கோல்டன் குளோப் விருதுகளைப் பெற்றது. இந்நிலையில் சினிமா உலகின் தலைசிறந்த பரிசாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு இந்தப் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு உள்ளிட்ட 10 பிரிவுகளுக்கு ஸ்லம் டாக் மில்லினர் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 3 பிரிவுகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஆஸ்கார் விருதுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஹ்மான், ஆஸ்கார் விருதுக்கு தனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

நன்றி; குமுதம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு