ஞாயிறு, ஜூன் 28, 2009

Night at the Museum: Battle of the Smithsonian (2009)

Your Ad Here

கடந்த சனிக்கிழமை நேரம் வேலை ஒன்றும் இல்லாமல் போகவே Liberty Cinemaவில் கிரகப் பிரவேசம் செய்ய முடிவுசெய்தேன். முதலில் அங்கே Start Trek திரைப்படம் ஒடுவதாக நினைத்தேன். போய்ப் பார்த்த பின்னர்தான் தெரிந்தது அங்கே நைட் அட் த மியூசியம் ஒடுது என்று. ஏற்கனவே முதலாம் பாகம் பார்த்திருந்தமையால் இந்த பாகத்திலும் ஓரளவு நம்பிக்கை இருந்தது.

Larry Daley ஒரு முன்னாள் அருங்காட்சியக காவலாளி. இப்போது டார்ச் லைட்டுவிற்கும் ஒரு சேல்ஸ் ரெப் ஆகிட்டார் ;). ஒரு நாள் மீள தான் பணிபுரிந்தஅருங்காட்சியத்துக்குச் செல்லும் போது அங்கே இருந்து பொருட்களைஅப்புறப்படுத்துவதைக் காண்கின்றார். இவை அனைத்தும் வேஷிங்டன் டி.சியில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய அருங்காட்சியத்திற்கு மாற்றப்படுவதைகேள்விப்பட்டு அலறியடிக்கின்றார். அங்கிருந்து எவ்வாறு இந்தஅரும்பொருட்களை மீட்டு தனது பழைய அருங்காட்சியத்திற்கு கொண்டு வருகின்றார் என்பதுதான் மிகுதிக் கதை.



முதல் பாகத்தை நீங்கள் பார்த்திருக்காவிட்டால் மேல் உள்ள குறிப்பை வாசித்து தலைகாய்திருப்பீர்கள். அரும்பொருட்களை மாற்றும் செய்தியறிந்து அவர் அலறியதற்கு காரணம், இரவானால் அந்த அருங்காட்சியத்தில் உள்ள பொருட்கள் உயிர்பெற்று எழுந்துவிடும் என்பதே.

அருங்காட்சியத்தில் இருக்கும் ஒரு பழைய தங்கத் தகடு இரவானதும் அருங்காட்சியத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் உயிரூட்டிவிடிகின்றது. இப்போது இந்தப் பொருட்கள் உலகின் பெரிய அருங்காட்சியகத்திற்குச் சென்றால் அங்குள்ள பொருட்கள் எல்லாம் உயிர்பெற்றுவிடுமல்லவா???

எப்படியோ Larry Daley எல்லையை மீறி வோஷிங்டன் செல்லுகின்றது அருங்காட்சியப் பொருட்கள். அவற்றை மீட்க அவர்களுடன் பின்னாலேயே Larry Daley ம் போய்ச்சேர்ந்து கடும் சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றார்.

இதற்குமேலே நான் கதையை சொல்லப்போவதில்லை. முதலாம் பாகத்துடன் ஒப்பிடும் போது இந்தப் பாகம் அவ்வளவு விறுவிறுப்பு இல்லை. முதலில் அருங்காட்சிய பொருட்கள் எழுந்து வருவதை பார்க்கும் போது இருந்த திகில் இப்போது இல்லை.

ஆனாலும் என்னை சுற்றி இருந்த சிறுவர் குலாம் திரைப்படத்தை இரசித்துப் பார்த்தமை மூன்றாம் பாகத்திற்கான ஒரு அபாய அறிகுறி ;).

நாயகன் Larry Daley உடன் திரைக்கதையில் சேர்ந்துகொள்ளுகின்றார் நாயகி Amelia Earhart. இவர் ஒரு மெழுகுப் பொம்மை. அதாவது முதலாவதாக அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு விமானம் ஓட்டிச்சென்ற பெண்மணி. இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி சிறப்பு. அநியாயத்திற்கு அந்தப் பெண்ணும் அடிக்கடி Larry Daley க்கு நச்சு நச்சு என்று முத்தம் வைக்கின்றார்.

இதைவிட ஆபிரகாம் லிங்கன், சீசர், நெப்போலியன் மற்றும் வில்லன் எகிப்திய மன்னன் ஆயியோரும் வந்து அலுப்படிக்கின்றனர்.

வீட்டில் சின்னப்பசங்க இருந்தா கூட்டிட்டுப்போய் பார்த்து இரசித்துவிட்டு வாருங்க. மற்றும்படி பெரியவர்களை கட்டிப்போடும் அளவிற்கு இந்த திரைப்படத்தில் பெரிய ஈர்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

லேபிள்கள்: ,

4 கருத்துகள்:

Blogger Subash கூறியது…

பதிவிற்கு மிக்க நன்றிகள் மயு.
லிபர்டி பக்கம் கடைசியாக வுல்வரின் பார்த்தேன். அத்டீதோடு அந்தப்பக்கமே போகவில்லை. இடிக்கட்ஸ் இல்லாததால் எங்க என்ன ஓடுதுனே பார்க்க கஷ்டம்.

யார் சொன்னது நான் சின்னப்பிள்ளையில்லள்று? படத்த பார்க்கறது பார்க்கறதுதான் :) :) :)

12:38 AM  
Blogger Jay கூறியது…

@சுபாஷ்
பாக்கிறதெண்டு முடிவெடுத்திட்டீங்க.. பாருங்க..! பின்விழைவுகளுக்கு நான் பொறுப்பல்ல! ;)

ஆமாம் இப்ப ஈ-டிக்கட்ஸ் இல்லாம கடும் பிரைச்சனை.

12:41 AM  
Blogger Subash கூறியது…

http://www.ticketslk.com/ parunga :)
ipa Mejastic matumthan iruku.
ana mathathela vanthudum :)

7:08 PM  
Blogger Jay கூறியது…

நன்றி சுபாஷ் இந்த தளம் facebook மூலம் ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனது ;)

7:58 PM  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு