ஹரிபாட்டர் 6ம் பாகம் இறுதியில் வெளியாகின்றது


கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் (Harry Potter and the Half-Blood Prince) கடைசியாக இம்மாதம் வெளிவர உள்ளது. இன்று நடிகர்கள் பிருத்தானியாவில் சிவப்பு கம்பள நாடகத்தை நடத்தி முடித்தனர். கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டு தம் சந்தோஷத்தை தெரிவித்தனர்.
திரைப்பட வரிசையில் ஆறாம் திரைப்படமான இந்த திரைப்படம் ஜே.கே.ராவ்லிங்கின் புத்தகத்தைத் தழுவி திரைப்படம் ஆக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் ஜூலை 15ம் திகதியும் வட அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இரண்டு நாட்கள் கழித்தும் இந்த திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.
அனைவராலும் பேசப்படும் ரான் வீஸ்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் Rupert Grint பன்றிக் காய்ச்சலுக்கு ஆளானபோதும் அதில் இருந்து மீண்டுவந்து இரசிகர்களை மகிழ்வித்தார். "Swine flu is nothing really, I found out. It's just like normal flu, it's just that you are in bed for a while,"என்று பீலா கூட விட்டுள்ளார்.
வழமைபோல இலங்கையில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று நான் நினைக்கவேயில்லை. திருட்டு டிவிடிதான் தஞ்சம் ;)
லேபிள்கள்: சினிமா, வெளிவரஉள்ளவை, ஹரி போட்டர், ஹரி போட்டர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு