புதன், ஜூலை 08, 2009

ஹரிபாட்டர் 6ம் பாகம் இறுதியில் வெளியாகின்றது

Your Ad Here

கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் (Harry Potter and the Half-Blood Prince) கடைசியாக இம்மாதம் வெளிவர உள்ளது. இன்று நடிகர்கள் பிருத்தானியாவில் சிவப்பு கம்பள நாடகத்தை நடத்தி முடித்தனர். கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டு தம் சந்தோஷத்தை தெரிவித்தனர்.

திரைப்பட வரிசையில் ஆறாம் திரைப்படமான இந்த திரைப்படம் ஜே.கே.ராவ்லிங்கின் புத்தகத்தைத் தழுவி திரைப்படம் ஆக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் ஜூலை 15ம் திகதியும் வட அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இரண்டு நாட்கள் கழித்தும் இந்த திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

அனைவராலும் பேசப்படும் ரான் வீஸ்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் Rupert Grint
பன்றிக் காய்ச்சலுக்கு ஆளானபோதும் அதில் இருந்து மீண்டுவந்து இரசிகர்களை மகிழ்வித்தார். "Swine flu is nothing really, I found out. It's just like normal flu, it's just that you are in bed for a while,"என்று பீலா கூட விட்டுள்ளார்.

வழமைபோல இலங்கையில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று நான் நினைக்கவேயில்லை. திருட்டு டிவிடிதான் தஞ்சம் ;)

லேபிள்கள்: , , ,

ஞாயிறு, மார்ச் 11, 2007

22 : ஹரி போட்டர் ரெயிலர் (Harry Potter Trailor)

Your Ad Here
டம்பிள் டோரின் சிறப்புப் படையணி!



ஹரி போட்டர் அன்ட் த ஆடர் ஆப் பீனிக்ஸ் ஜூலை வர இருப்பது தெரிந்ததே! அந்த ரெயிலர் இன்று ஒரு தளத்தில் பார்த்தேன்..

காட்சியில் ஹரி செள வை முத்தமிடும் காட்சியையும் சேர்த்திருக்கார்கள். டப் என்று வந்து மறைகின்றது.

கதை வாசித்தவர்களுக்கு காட்சிகள் என்ன என்ன வென்று புரியும் என்னைமாதிரி இதுவரை முக்கால்வாசி வாசித்தவர்களுக்கே ரெயிலரில் முக்காவாசி புரிகின்றது போய்த்தான் பாருங்களேன்.!

http://www.harrypotterorderofthephoenix.com/

லேபிள்கள்: ,

திங்கள், பிப்ரவரி 19, 2007

17 : ஹரிபோட்டர் சாக வேண்டுமாம்

Your Ad Here


ஹரி போட்டர் திரைப்படத்தில் ஹரியின் வேடத்தில் நடித்த Daniel Radcliffe தான் ஹரி போட்டர் கடைசிப் புத்தகத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தன் பாத்திரம் இந்தப் பாகத்துடன் கொல்லப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதே வேளை ராவ்லிங் Harry Potter and the Deathly Hallows என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளதும் இது ஜூலை 21 வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ராட்கிளிஃப் இது வரை வெளிவந்த நான்கு ஹரி போட்டர் படங்களில் நடித்துள்ளதுடன் அடுத்து வரும் 3 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இறுதிப் பாகத்தில் ஹரி இறப்பதாகவே ராவ்லிங் எழுதி இருப்பார்.. அத்துடன் ஒரு சோகமான காட்சியுடன் நான் இறப்பதாக திரைப்படம் அமையும் என்று நம்புகின்றேன்" என்று கூறினார்.

பார்ப்போம் கடைசிப் புத்தகத்தில் ஹரி இறக்கின்றாரா என்று!!!!

லேபிள்கள்: , ,