சனி, செப்டம்பர் 26, 2009

The Other Man (2008) விமர்சனம்

Your Ad Here

மணமான நபர்களின் கள்ளக்காதல் வெளித் தொடர்புகளை வைத்து பல திரைப்படங்கள் இது வரை ஆங்கில சினிமாவில் வெளிவந்துள்ளது. Unfaithful போன்ற திரைப்படங்கள் இவற்றில் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படங்கள். The Other Man திரைப்படக் கதையும் இது சம்பந்தப் பட்டதே. மனைவியின் கடந்த காலம் பற்றி அறிய கிடைக்கும் கணவன் மணம் உடைந்து அந்த பழைய கள்ளக் காதலனைத் தேடுவதே கதை.



ஒரு நாள் தன் மனைவியின் செல்பேசிக்கு வரும் Voice Mail இல் ஆரம்பித்து email, password protected folder வரை சென்று மனைவியின் கள்ள உறவு பற்றி அறிந்து கொள்கின்றான் கணவன். பின்னர் அந்த நபர் யார் என்று அறியும் நோக்கில் மனைவி போல மின்னஞ்சலுக்கு பதில் போட்டு அவன் இருக்கும் இடம் சென்று அந்த நபரை சந்திக்கின்றார் கணவர்.

திரைப்படம் முடியும் போது வழமைபோல ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொல்கின்றார்கள். அதை கேட்டதும் அட பாவமே என்று மனம் குழைகின்றது.



Liam Neeson இந்த திரைப்படத்தில் கணவன் பாத்திரத்தில் நடிக்கின்றார். முன்னாள் கள்ளக் காதலன் பாத்திரத்தில் Antonio Banderas நடிக்கின்றார். Liam Neeson நல்ல ஒரு நடிகர்தான் இவரை நீங்கள் Taken, Batman Begins போன்ற திரைப்படங்களில் பாத்திருக்கலாம்.

Antonio Banderas நீங்கள் பார்த்து இரசித்த ஷிரேக் திரைப்படத்தில் வரும் Puss in the boot பாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். Puss in the boot என்றே ஒரு திரைப்படம் எதிர்காலத்தில் வர உள்ளது. அதற்கும் இவரே குரல் கொடுக்கவுள்ளார்.


வழைமையான பழைய மொந்தையில் புதிய கள். கண்டிப்பாக இது வயது வந்தோரிற்கான திரைப்படம்.

RATING 65/100

லேபிள்கள்: ,

8 கருத்துகள்:

Blogger புல்லட் கூறியது…

ம்ம் நான் இன்னும் பார்க்கவில்லை.. பார்த்து விடலாம்.. நான் பெரிதான ட்ராமா ரொமான்ஸ் படங்கள் பார்ப்பதில்லை... ஆனால் ஆயிரத்துக்கு அறுபத்தைந்து என்பது மிக் கேவலாமன ஒரு புள்ளி.. ஹிஹி

11:39 PM  
Blogger Jay கூறியது…

ஹி...ஹி.. அது 100 என்று இருக்க வேண்டும். இறுதியில் ஒரு பஞ்ச் வைப்பார்கள். அந்த பஞ்ச் இல்லாவிட்டால் இந்த திரைப்படம் ஜீரோதான்.

11:42 PM  
Blogger சென்ஷி கூறியது…

:-)

என்ன பஞ்ச்ன்னு நீங்க சொல்லியிருந்தீங்கன்னா இந்தப் படத்தை நாங்க பார்க்காம தப்பிக்க வைக்கலாமே

8:52 AM  
Blogger Jay கூறியது…

@சென்ஷி...
ஹி..ஹி.. அப்ப திரைப்படத்தைப் பார்த்து நொந்து போயிட்டீங்களா???

SPOILER
அவர் மனைவி இறந்த பின்னரே இந்த கள்ளக் காதலன் வேட்டையைத் தொடங்கிகின்றார். திரைப்படம் முடிந்த பின்னரே மனைவி இறந்துவிட்ட கதையை அவிழ்க்கின்றார்கள்.

9:30 AM  
Blogger சென்ஷி கூறியது…

//Blogger Mayooresan கூறியது…

@சென்ஷி...
ஹி..ஹி.. அப்ப திரைப்படத்தைப் பார்த்து நொந்து போயிட்டீங்களா???

SPOILER
அவர் மனைவி இறந்த பின்னரே இந்த கள்ளக் காதலன் வேட்டையைத் தொடங்கிகின்றார். திரைப்படம் முடிந்த பின்னரே மனைவி இறந்துவிட்ட கதையை அவிழ்க்கின்றார்கள்.
//

நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். இந்த சினிமாவை நான் இன்னும் பார்க்கலை. டவுன்லோடு செய்யலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். நல்ல வேளை செய்யலை..

:)

9:51 AM  
Blogger வெடிகுண்டு வெங்கட் கூறியது…

// திரைப்படம் முடிந்த பின்னரே மனைவி இறந்துவிட்ட கதையை அவிழ்க்கின்றார்கள்//

அது எப்படி சார் படம் முடிந்த பின்னர் இந்த மேட்டரை சொல்ல முடியும்?

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்

12:03 PM  
Blogger Jay கூறியது…

@வெடிகுண்டு வெங்கட்
சாரே, படம் எடுத்திருக்கின்றது ஹாலிவூட் காரங்கள் என்பதையும் பேரரசு இல்லை என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். சொல்லும் விதமே தனி ரகம். அதுவே ஹாலிவூட் காரன் ஸ்டைல்! இதெல்லாம் எப்ப எங்கட தமிழ் திரைப்பட படாதிபதிகளுக்குப் புரியப் போகின்றது.

1:17 PM  
Blogger Jay கூறியது…

ஆஹா.. இப்ப புரியுது.. ஹி..ஹி.. இப்படி மாத்திக்குங்க.. முடியும் தறுவாயில் என்று ;)

1:19 PM  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு