அவதார் பாகம் II விரைவில்


உலகம் எங்கும் சக்கைபோடும் அவதார் திரைப்படம் பற்றி நமது வலையுலக நண்பர்கள் பதிவிட்டு பிய்த்து மேய்ந்துவிட்டதால் அந்த முயற்சியில் இறங்க அடியேன் முயற்சிக்கவில்லை. ஆயினும் இன்றுதான் அடியேனுக்கு அவதார் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. டிசம்பர் 23ம் திகதியே கொழும்பில் அவதார் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டாலும் சன நெருக்கடி காரணமாக இன்றுதான் சென்று பார்க்க கிடைத்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காய்க்கும் வெயிலில் நின்றுதான் திரைப்படம் பார்க்கவேண்டியிருந்தது. கொழும்பின் மேட்டுக்குடிகளும் காய்ச்சும் வெயிலிலும் காத்து நின்று திரைப்படம் பார்த்தது வியப்பாக இருந்தது. திடீர் என்று எங்கோ இருந்து முளைத்த சிறிய பொண்ணு ஒன்று "So you all wanna see some freaky aliens..huh?" என்று நீண்டு நெளிந்து வளைந்து சென்ற வரிசையைப் பார்த்து சொல்லிக்கொண்டு சென்றது.

இந்த வேளையில் ஜேம்ஸ் கமரோன் "Yes, there'll be another." என்று நான்கு வார்த்தையில் பல இரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்துவிட்டார்.
அடுத்த பாகத்தில் கதை என்னவாக இருக்கும் என்று அமெரிக்க தொலைக்காட்சிகளும் வலைத்தளங்களும் யோசிக்கத் தொடங்கியுள்ளன. இதில் சிலர் அடுத்த பாகம் பன்டோராவைவிட்டு அதன் வெளியே நடக்கும் என்று கூறியுள்ளனர். குறிப்பாக பண்டோராவின் சந்திரன்களின் நடைபெறலாம் என்று கூறுகின்றனர்.

சிலர் கருத்து தெரிவிக்கையில், முதலாம் பாகத்தில் மரத்தில் வாழும் நாவி இனத்தவரைத்தான் இந்த திரைப்படத்தில் காட்டுகின்றார்கள். ஆனாலும் இறுதி யுத்தத்தில் பல உள்ளூர் நாவி இனத்தவர்கள் ஒன்றினைகின்றனர். உதாரணமாக குதிரை வீரர்கள், பறவைகளில் பறந்து வரும் இனம் என்று பல இருக்கின்றனர். இவர்களின் உள்ளூர் அரசியல் என்ன போன்றவை பற்றி பாகம் ஒன்றில் குறிப்பிடப்படவில்லை ஆகவே இது பற்றி இரண்டாம் பாகத்தில் மேலும் கூறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ இனி ஜேம்ஸ் கமரோன் விட்ட வழியேதான். அவர் என்ன செய்து காட்டப்போகின்றார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.
I loved the first film and I hope the sequel will be just as good.
லேபிள்கள்: சினிமா, செய்திகள், வெளிவரஉள்ளவை
2 கருத்துகள்:
மாயு,
மறுபடியும் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க. வாழ்த்துக்கள். படத்தை ரசிச்சீங்களா?
ஆமாம் விஷ்வா நீண்ட நாட்களுக்குப் பின்னர் பதிவு. நிச்சயமாக படத்தை இரசித்தேன். குறிப்பாக இறுதிக் காட்சிகளில் படத்துடன் ஒன்றிணைந்துவிட்டேன். இங்கே 3டி யில் காட்டவில்லை.. உங்களூரில் எப்படி?
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு