திங்கள், பிப்ரவரி 15, 2010

Yes Man (2008) விமர்சனம்

Your Ad Here

நடிகர் ஜிம் காரியின் திரைப்படங்களை நம்மில் பலரும் பார்த்து இரசித்திருப்போம். குறிப்பாக The Mask போன்ற திரைப்படங்களை மறநிதிருக்க வாய்ப்பேயில்லை. அவரின் ஒரு திரைப்படமே இந்த யெஸ் மான் எனும் திரைப்படம். விவாகரத்துப் பெற்று வாழ்க்கை வெறுத்து இருக்கும் ஒரு சிங்கிள் ஆடவனைச் சுற்றியே இந்தக் கதை அமைந்திருக்கின்றது. வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து இருப்பவர்கள் பார்த்து இரசிக்க வேண்டிய ஒரு திரைப்படம்.
நகைச்சுவை என்ற பெயரில் அறுவைப் படங்களை எடுப்பதில் ஹொலிவூட்டிற்கு நிகர் ஹொலிவூட்டே (எங்கள் விசய் மற்றும் அசித் போன்றவர்கள் அக்சன் படம் எடுத்து அது காமெடிப் படம் ஆவது வேறு விடையம்). அந்த வரிசையில் சேர்ந்து விடாமல் தனித்து நிற்கின்றது இந்த திரைப்படம். பெரிய எதிர் பார்ப்புகளுடன் இந்த திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பிக்காவிட்டாலும் போக போக திரைப்படத்துடன் ஒட்டிவிட்டேன்.

வாழ்க்கை வெறுத்துப் போய் சமூகத்துடன் ஒட்டாமல் ஒட்டாண்டியாக வாழ்ந்து வருகின்றார் ஜிம் கரி. வங்கியொன்றில் பணி புரியும் ஜிம் கரி (கால்) தனது பணியில் கூட பெரிதாக மிளிராமல் இருக்கின்றார். இந்த வேளையில் அவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்வுதான் "Yes Man" எனும் ஒரு நிகழ்ச்சித் தொடரில் இணைந்து கொள்வதாகும்.

இந்த நிகழ்ச்சித் தொடரில் இணைந்து கொண்டபின்னர் வாழ்க்கையில் வரும் அனைத்து வாய்ப்புகளுக்கும் "ஆம்" என்று சொல்லவேண்டும் என்பதே கட்டுப்பாடு. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பது நமக்குத் தெரிந்த கதை தானே?? ஆனால் ஜிம் கரி எதையும் அசண்டை செய்யாமல் ஆம் ஆம் என்று வாழ்க்கையை ஓட்டுகின்றார்.

இந்த ஆம் ஆம் பழக்கம் ஆரம்பத்தில் ஆகா ஓஹோ என்று வேலை செய்கின்றது. அழகான ஒரு காதலியைக் கூடத் தேடிக் கொடுகின்றது. ஆனால் மிகுதி என்ன ஆனது?? டிவிடில பாருங்க.. ஹி.. ஹ.. ;)

அனைவரும் பார்த்து இரசிக்க வேண்டிய திரைப்படம். முடிவில் கொஞ்சம் மசாலா கலந்து இருந்ததைக் காணக்கூடியதாக் இருந்தது ஆனால் திரைப்படம் அருமையாக இருந்தது.

ஜிம் கரி நகைச்சுவைத் திணைக்களத்தை வாடகைக்கு எடுத்து மொக்கை மொக்கையாகப் போட்டுத் தாக்குகின்றார். சில இடங்களில் காமெடி என்று கடியாக இருந்தாலும் பெரும்பாலும் நல்ல நகைச்சுவையாகவே திரைப்படம் நகர்கின்றது.

My Rating 70/100
IMDB 70/100

லேபிள்கள்: ,

2 கருத்துகள்:

Blogger Maniy கூறியது…

ஜிம் காரி படங்களிலேயே சிறந்த படம் என்றால் The Truman Show'தான் (http://www.imdb.com/title/tt0120382/). Eternal Sunshine of the Spotless Mind'ஐயும் குறிப்பிடத் தவறக்கூடாது. The Maskதான் ஜிம் காரியின் முத்திரையை ஹாலிவூட்டில் முதல்முறையாகப் பதித்தாலும், அவரின் நகைச்சுவைப் படங்களில் Lier Lier மற்றும் Bruce Almighty, The Maskஐ விட இனிமையானவை.

7:04 பிற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

உங்கள் கருத்து சரியானதே. இதே போலவே நம்பர் 23 எனும் சைக்கோ த்ரில்லரும் எனது விருப்பமான திரைப்படங்களில் ஒன்று. ..

http://hollywood.mayuonline.com/2008/07/number-23-2007.html

1:00 பிற்பகல்  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு