வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010
சனி, பிப்ரவரி 20, 2010
The Wolfman (2010)


ஏதோ கடவுள் புண்ணியத்தில் இப்போது சில ஹொலிவூட் திரைப்படங்கள் வெளியாகி சில நாட்களிளோ வாரங்களிலோ இலங்கையிலும் வெளியாகத் தொடங்கியிருக்கின்றது. பெருமளவில் திரைப்படங்கள் வெளியாவதில்லை என்றாலும் ஓரளவு எதிர்பார்ப்புள்ள பேசப்படும் திரைப்படங்களை வெளியிடத் தொடங்கியுள்ளார்கள். அந்தவகையில் இன்று கொழும்பு மஜெஸ்டிக் சினிமாவில் பார்த்து களித்த திரைப்படம்தான் இந்த The Wolfman. 1930 கள் மற்றும் 40 துகளில் யூனிவர்சல் சூடூடியோ காரர்கள் பல திகில் திரைப்படங்களை எடுத்து தள்ளினார்கள். அவ்வப்போது அந்த திரைப்படங்களை இக்காலத்திற்கேற்றவாறு மீளாக்கம் செய்து வருகின்றார்கள் இதற்கு உதாரணமாக மம்மி போன்ற திரைப்படங்களைக் கூறலாம். The wolfman திரைப்படம் முறையே 1966 மற்றும் 1941இல் அமெரிக்காவில் வெளியாகி இருந்தாலும் மீள 2010ல் திரைப்படம் மீளாக்கம் செய்யப்பட்டு யூனிவர்சல் ஸ்டூடியோவால் வெளியிடப்பட்டுள்ளது.
கதைக் களம் 1890ல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. ஏதோ ஒருவகை மிருகத்தினால் தம்பி கொலை செய்யபட்ட கதையைக் கேட்டு இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா திரும்புகின்றார் அண்ணன் லோரன்ஸ். மீள வீடு திரும்பும் மகனை வரவேற்கின்றார் ஒரு மாதிரியான போக்குடை தந்தையார் (Anthony Hopkins).
தம்பி கொலையில் ஈடுபட்ட மிருகம் பற்றிய துப்புத் துலக்கலில் ஈடு படப்போய் கடைசியில் ஓநாய் உருவுடைய மிருகத்தினால் கடிபடுகின்றார் நம்ம நாயகன். இவ்வாறாக ஒநாய் உருவுடைய மிருகத்தினால் கடிபட்டால் என்னவாகும் என்பது நாங்கள் அறிந்ததுதானே. அடுத்த பௌர்ணமியில் அவரும் ஒநாயாக மாறுவார்.
ஓநாய் பிடிக்கப்போனவர் கடைசில் ஒநாயாகி மனிதவேட்டை நடத்துகின்றார். பின்னர் பொலிசார் இவரை மடக்கிப் பிடிக்கின்றனர்.
ஒரு ஓநாய் மனிதன் இந்ந லோரண்ஸ் மற்ற ஒநாய் மனிதன் யார் எனபதே கதை. அந்த ஒநாயை பழிவாங்குகின்றாரா நம்ம நாயகன் என்பது மிகுதிக் கதை.

நிச்சயமாக இந்த திரைப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை ஆயினும் அசல் பார்ப்பதைவிட நம்பி திரையரங்கு சென்று பார்க்கலாம்.
My Rating: 50/100
IMDB Rating: 66/100
லேபிள்கள்: சினிமா, திரைவிமர்சனம்
திங்கள், பிப்ரவரி 15, 2010
Yes Man (2008) விமர்சனம்


நடிகர் ஜிம் காரியின் திரைப்படங்களை நம்மில் பலரும் பார்த்து இரசித்திருப்போம். குறிப்பாக The Mask போன்ற திரைப்படங்களை மறநிதிருக்க வாய்ப்பேயில்லை. அவரின் ஒரு திரைப்படமே இந்த யெஸ் மான் எனும் திரைப்படம். விவாகரத்துப் பெற்று வாழ்க்கை வெறுத்து இருக்கும் ஒரு சிங்கிள் ஆடவனைச் சுற்றியே இந்தக் கதை அமைந்திருக்கின்றது. வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து இருப்பவர்கள் பார்த்து இரசிக்க வேண்டிய ஒரு திரைப்படம்.
நகைச்சுவை என்ற பெயரில் அறுவைப் படங்களை எடுப்பதில் ஹொலிவூட்டிற்கு நிகர் ஹொலிவூட்டே (எங்கள் விசய் மற்றும் அசித் போன்றவர்கள் அக்சன் படம் எடுத்து அது காமெடிப் படம் ஆவது வேறு விடையம்). அந்த வரிசையில் சேர்ந்து விடாமல் தனித்து நிற்கின்றது இந்த திரைப்படம். பெரிய எதிர் பார்ப்புகளுடன் இந்த திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பிக்காவிட்டாலும் போக போக திரைப்படத்துடன் ஒட்டிவிட்டேன்.
வாழ்க்கை வெறுத்துப் போய் சமூகத்துடன் ஒட்டாமல் ஒட்டாண்டியாக வாழ்ந்து வருகின்றார் ஜிம் கரி. வங்கியொன்றில் பணி புரியும் ஜிம் கரி (கால்) தனது பணியில் கூட பெரிதாக மிளிராமல் இருக்கின்றார். இந்த வேளையில் அவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்வுதான் "Yes Man" எனும் ஒரு நிகழ்ச்சித் தொடரில் இணைந்து கொள்வதாகும்.

இந்த ஆம் ஆம் பழக்கம் ஆரம்பத்தில் ஆகா ஓஹோ என்று வேலை செய்கின்றது. அழகான ஒரு காதலியைக் கூடத் தேடிக் கொடுகின்றது. ஆனால் மிகுதி என்ன ஆனது?? டிவிடில பாருங்க.. ஹி.. ஹ.. ;)
அனைவரும் பார்த்து இரசிக்க வேண்டிய திரைப்படம். முடிவில் கொஞ்சம் மசாலா கலந்து இருந்ததைக் காணக்கூடியதாக் இருந்தது ஆனால் திரைப்படம் அருமையாக இருந்தது.
ஜிம் கரி நகைச்சுவைத் திணைக்களத்தை வாடகைக்கு எடுத்து மொக்கை மொக்கையாகப் போட்டுத் தாக்குகின்றார். சில இடங்களில் காமெடி என்று கடியாக இருந்தாலும் பெரும்பாலும் நல்ல நகைச்சுவையாகவே திரைப்படம் நகர்கின்றது.
My Rating 70/100
IMDB 70/100
லேபிள்கள்: சினிமா, திரைவிமர்சனம்
புதன், ஜனவரி 20, 2010
Zombieland (2009)


இந்த சொம்பி (Zombie) என்ற எண்ணக்கருவை வைத்துப் பல திகல் திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் Rsident Evil, The Legend போன்ற திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றில் வரும் அதே சொம்பிகள்தான் இந்த திரைப்படத்திலும் ஆனால் ஒரு வித்தாயாசம், நான் அறித்தவரை இதுதான் சொம்பிகளை வைத்து எடுத்த முதலாவது காமடித் திரைப்படம். காமடித் திரைப்படமா, இல்லை திகில் திரைப்படமா என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே திரைப்படம் கல கலவென்று முடிந்துவிடுகின்றது.
வழமைபோல ஹொலிவூட் பாலா சொல்கின்ற கனடாவில் தொடங்கி மெக்சிக்கோவில் முடிகின்ற உலகத்தில் இருக்கும் மானிடர்கள் பலரும் சொம்பி தாக்குதலில் தாங்களும் சொம்பி ஆகிவிட எஞ்சியிருக்கும் சில மானிடர்களின் சிரிப்புச் சாகசமே இந்தத் திரைப்படம்.
Columbus என்று ஒரு பொடியன் அவனுக்கு எதைக் கண்டாலும் பயம். அதிலும் கோமாளியைக் கண்டால் இன்னும் பயம். ஆமாம், தேனாலி கமல் மாதிரி. அதனால் சொம்பித் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனக்கு தானே பல விதிகளை வகுத்துக்கொள்கின்றான். உதாரணமாக காரில் ஏறும் போது பின் ஆசனத்தில் சொம்பி இருக்கின்றதா என்று பார்த்தல், இரண்டுக்குப் போகும் போது கையில் துப்பாக்கியுடன் இருத்தல், முதல் தடவை சொம்பியை சுட்டாலும் இரண்டாம் தடவையும் மண்டையை குறிபார்த்துச் சுடதல் போன்றவையடக்கம். அதைவிட எப்போதும் ஹீரோவாக ரை பண்ணாதே என்கிறதும் ஒரு முக்கியமான விதிமுறை.

அப்புறம் அந்த திருட்டுத் தண்டா செய்யும் ஒரு பெண்ணுடன் நம்மவர் காதலில் விழுவார் என்பதையும் நான் சொல்லியா உங்குளுக்குத் தெரியவேண்டும்.
இவர்கள் எவ்வாறு ஒருத்தருக்கு ஒருவர் அறிமுகம் ஆகின்றார்கள், இவர்களின் பயனம் போன்றவற்றை மையப்படுத்தி கதை மிகுதி நகர்கின்றது.
IMDB: 79/100
Mayu: 50/100
லேபிள்கள்: சினிமா, திரைவிமர்சனம்
திங்கள், ஜனவரி 18, 2010
அவதார் கோல்டன் குளோப் விருதையும் தட்டியது


அவதார் காய்ச்சல் உலகம் எங்கும் குறைந்தபாடே இல்லை. தொடர்ந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏன் வேட்டைக்காரன் கூட ஓடுகின்றது தானே? என்று நீங்கள் கேட்கலாம்..ஆனால் வெறும் தியட்டரில் படம் ஓட்டுவதற்கும் மக்கள் நிறைந்த தியட்டரில் படம் ஓட்டுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா??
கோல்டன் குளோப் விருதைத் தொட்டால் அனேகம் ஆஸ்கார் விருதுகளையும் எட்டிவிடலாம் என்பது பல காலமாக நடந்துவரும் விடையம்தான். தற்போது கோல்டன் குளோப் விருதை அவதார் தட்டிச்சென்றுவிட்டது.
இன்று நடந்த நிகழ்வில் அதைவிட இயக்குனர் ஜேம்ஸ் கமரோனுக்கு சிறந்த இயக்குனருக்கான கௌரவமும் வழங்கப்பட்டுள்ளது.
Avatar asks us to see that everything is connected, all human beings to each other, and us to the Earth. And if you have to go four and a half light years to another, made-up planet to appreciate this miracle of the world that we have right here, well, you know what, that's the wonder of cinema right there, that's the magic,'என்று கூறி தனது விருதினை ஏற்றுக்கொண்டார்.
ஆஸ்கார் வெற்றிக் கனிகளை அவதார் பறிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கமரோனின் டைட்டானிக் திரைப்படம் 1998ல் 11 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச்சென்றதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.
வசூலிலும் விரைவில் டைட்டானிக்கின் வசூலை எட்டிப்பிடித்துவிடுவதாக அவதார் மிரட்டிக்கொண்டுள்ளது. ஐந்து வாரங்களாக தொடர்ந்து அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் அவதார் திரைப்படம் முன்நிலையில் உள்ளது.
லேபிள்கள்: ஆஸ்கார் விருதுகள், சினிமா, செய்திகள்
ஞாயிறு, ஜனவரி 10, 2010
அவதார் பாகம் II விரைவில்


உலகம் எங்கும் சக்கைபோடும் அவதார் திரைப்படம் பற்றி நமது வலையுலக நண்பர்கள் பதிவிட்டு பிய்த்து மேய்ந்துவிட்டதால் அந்த முயற்சியில் இறங்க அடியேன் முயற்சிக்கவில்லை. ஆயினும் இன்றுதான் அடியேனுக்கு அவதார் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. டிசம்பர் 23ம் திகதியே கொழும்பில் அவதார் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டாலும் சன நெருக்கடி காரணமாக இன்றுதான் சென்று பார்க்க கிடைத்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காய்க்கும் வெயிலில் நின்றுதான் திரைப்படம் பார்க்கவேண்டியிருந்தது. கொழும்பின் மேட்டுக்குடிகளும் காய்ச்சும் வெயிலிலும் காத்து நின்று திரைப்படம் பார்த்தது வியப்பாக இருந்தது. திடீர் என்று எங்கோ இருந்து முளைத்த சிறிய பொண்ணு ஒன்று "So you all wanna see some freaky aliens..huh?" என்று நீண்டு நெளிந்து வளைந்து சென்ற வரிசையைப் பார்த்து சொல்லிக்கொண்டு சென்றது.

இந்த வேளையில் ஜேம்ஸ் கமரோன் "Yes, there'll be another." என்று நான்கு வார்த்தையில் பல இரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்துவிட்டார்.
அடுத்த பாகத்தில் கதை என்னவாக இருக்கும் என்று அமெரிக்க தொலைக்காட்சிகளும் வலைத்தளங்களும் யோசிக்கத் தொடங்கியுள்ளன. இதில் சிலர் அடுத்த பாகம் பன்டோராவைவிட்டு அதன் வெளியே நடக்கும் என்று கூறியுள்ளனர். குறிப்பாக பண்டோராவின் சந்திரன்களின் நடைபெறலாம் என்று கூறுகின்றனர்.

சிலர் கருத்து தெரிவிக்கையில், முதலாம் பாகத்தில் மரத்தில் வாழும் நாவி இனத்தவரைத்தான் இந்த திரைப்படத்தில் காட்டுகின்றார்கள். ஆனாலும் இறுதி யுத்தத்தில் பல உள்ளூர் நாவி இனத்தவர்கள் ஒன்றினைகின்றனர். உதாரணமாக குதிரை வீரர்கள், பறவைகளில் பறந்து வரும் இனம் என்று பல இருக்கின்றனர். இவர்களின் உள்ளூர் அரசியல் என்ன போன்றவை பற்றி பாகம் ஒன்றில் குறிப்பிடப்படவில்லை ஆகவே இது பற்றி இரண்டாம் பாகத்தில் மேலும் கூறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ இனி ஜேம்ஸ் கமரோன் விட்ட வழியேதான். அவர் என்ன செய்து காட்டப்போகின்றார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.
I loved the first film and I hope the sequel will be just as good.
லேபிள்கள்: சினிமா, செய்திகள், வெளிவரஉள்ளவை
சனி, செப்டம்பர் 26, 2009
The Other Man (2008) விமர்சனம்


மணமான நபர்களின் கள்ளக்காதல் வெளித் தொடர்புகளை வைத்து பல திரைப்படங்கள் இது வரை ஆங்கில சினிமாவில் வெளிவந்துள்ளது. Unfaithful போன்ற திரைப்படங்கள் இவற்றில் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படங்கள். The Other Man திரைப்படக் கதையும் இது சம்பந்தப் பட்டதே. மனைவியின் கடந்த காலம் பற்றி அறிய கிடைக்கும் கணவன் மணம் உடைந்து அந்த பழைய கள்ளக் காதலனைத் தேடுவதே கதை.
ஒரு நாள் தன் மனைவியின் செல்பேசிக்கு வரும் Voice Mail இல் ஆரம்பித்து email, password protected folder வரை சென்று மனைவியின் கள்ள உறவு பற்றி அறிந்து கொள்கின்றான் கணவன். பின்னர் அந்த நபர் யார் என்று அறியும் நோக்கில் மனைவி போல மின்னஞ்சலுக்கு பதில் போட்டு அவன் இருக்கும் இடம் சென்று அந்த நபரை சந்திக்கின்றார் கணவர்.
திரைப்படம் முடியும் போது வழமைபோல ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொல்கின்றார்கள். அதை கேட்டதும் அட பாவமே என்று மனம் குழைகின்றது.

Antonio Banderas நீங்கள் பார்த்து இரசித்த ஷிரேக் திரைப்படத்தில் வரும் Puss in the boot பாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். Puss in the boot என்றே ஒரு திரைப்படம் எதிர்காலத்தில் வர உள்ளது. அதற்கும் இவரே குரல் கொடுக்கவுள்ளார்.
வழைமையான பழைய மொந்தையில் புதிய கள். கண்டிப்பாக இது வயது வந்தோரிற்கான திரைப்படம்.
RATING 65/100
லேபிள்கள்: சினிமா, திரைவிமர்சனம்