புதன், மே 28, 2008

Cloverfield திரைப்பட விமர்சனம்

Your Ad Here

உங்கள் கையடக்க் வீடியோ கமிரா மூலம் எடுக்கும் வீடியோ திரைப்படமானால் எப்படியிருக்கும். Cloverfield எனும் திரைப்படம் அப்படிப்பட்டதே.

ஒருவர் ஜப்பான் போகின்றார், அவருக்கு ஒரு விருந்துபசார வைபவம் நடைபெறுகின்றது. இதில் இருந்து வீடியோ எடுக்கத் தொடங்குகின்றார் ஒருத்தர். கையடக்க கமிராவில் பிரியாவிடை நிகழ்வை படமாக்கத் தொடங்குகின்றார். இதில் அங்கு நடக்கும் அனைத்தையும் படமாக்கும் இவர், திடீர் என்று நிவ்யார்க் நகரத்தில் நடக்கும் திடுகிட வைக்கும் நிகழ்வுகளையும் படமாக்குகின்றார். குறிப்பாக சுதந்திரச்சிலையின் தலை பறந்துவந்து இவர்கள் இருக்கும் இடத்தில் விழுதல்.

தீடீர் என்று அமெரிக்க ஜெட் விமானங்கள் பறக்கின்றன. எதையோ துரத்தி துரத்தித் தாக்குகின்றன. அமெரிக்க இராணுவ வீரர்கள் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபடுகின்றார்கள். தரை, வான் எனப் பலவழிகளிலும் அமெரிக்க இராணுவம் தன் பலத்தை எல்லாம் பிரயோகிக்கின்றது. என்ன என்று அறியாமல் அலைபாயும் மக்கள் அவர்களுடன் அலைந்து திரியும் இந்த கமிரா காரன். என்று கதை விறுவிறுப்பாக நகர்கின்றது.

சுரங்கம் வழியாக, வீதிகள் ஊடாக, ஹெலி மூலம் என்று பல்வேறு வழிகளில் தப்ப முயற்சிக்கும் இவர்களும் இவர்களுன் விளையாடும் விதியும் கதிரை நுனியில் இருந்து திரைப்படத்தைப் பார்க்க வைக்கின்றது. கையில் இருக்கும் கமிராவினால் படம் எடுக்கப்படுவது போல பாவனை செய்ததால் திரையில் காட்சிகள் ஆடிக்கொண்டே இருக்கும். சிலருக்கு அதைப் பார்த்தால் தலை சுத்தலாம். அதுக்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியாது.

ஒரு பழைய வீடியோ டேப்பின் மேல் புதிய வீடியோவைப் பதிகின்றதாகவே திரைப்படத்தில் காட்டப்படுகின்றது. ஆகவே சில இடங்களில் இடையிடையில் பொருத்தமாக பழைய டேப்பின் பதிவுகளும் வருகின்றன. இதன் மூலம் பிளாஷ் பாக்கை மிகத் திறமையாக உட்புகுத்தியுள்ளனர்.

இவர் கமிராவில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பதியப்படுகின்றது. என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி நான் கூறப் போவதில்லை ஆனால் எப்படித்தான் இப்ப்படியெல்லாம் சிந்திக்கின்றார்களோ தெரியாது.

இந்த திரைப்படத்தை மிக இரகசியமாக எடுத்து திரையிட்டார்களாம். எங்கள் தசாவதாரம் போல திரைக்கதை முதலியவை வெளிவராமல் இருக்க மிகுந்த பிராயத்தனம் எடுத்தனராம். குறிப்பாக நடிகர்கள் தேர்வுசெய்யும் போதுகூட, திரைப்படத்துக்குப் பொருத்தமில்லாத சம்பந்தம் இல்லாத வசனங்களைப் பேச வைத்து நடிகர்களைத் தெரிவுசெய்தனராம்.

Sci-fi, Aciton திரைப்பட இரசிகர்களுக்கு நல்ல விருந்து. வித்தயாசமான முயற்சிகளைப் பார்த்து இரசிப்பவராக இருந்தாலும் இந்த திரைப்படத்தை நீங்கள் இரசிப்பீர்கள்.

லேபிள்கள்:

வியாழன், மே 01, 2008

The Hobbit திரைப்படம் விரைவில்

Your Ad Here
Description unavailableImage by dolanh via FlickrLord of the Rings கதாசிரியரின் இன்னுமொரு நாவலான The Hobbit விரைவில் திரைப்படமாக வெளிவர உள்ளது. உண்மையில் இந்தக் கதை LOTR இல் வரும் நாயகன் புரோடோவின் உறவினரான பில்போ பாக்கின்சின் வீர விளையாட்டுக்களை உள்ளடக்கியது. இந்தக் கதையிலேயே அவர் கொலமிடம் இருந்து அந்த மந்திர மோதிரத்தை எடுக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் LOTR இல் கன்டால்ப் ஆக நடித்த பிருத்தானிய நடிகர் McKellen மீண்டும் கன்டால்ப்பாக நடிக்க உள்ளார்.

2009 ல் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது. முதல் பாகம் 2010 இலும் இரண்டாம் பாகம் 2011 இலும் முறையே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

லேபிள்கள்: