திங்கள், ஜூன் 30, 2008

21 (2008) விமர்சனம்

Your Ad Here

அதி புத்திக் கூர்மையுள்ள ஆறு M.I.T மாணவர்களை சுற்ற நடக்கும் கதையிது. பென் கம்பெல் எனும் மாணவன், ஹாவாட் மருத்துவ பாடசாலையில் சேர்ந்து படித்து எதிர்காலத்தில் வைத்தியராக விரும்புகின்றான். இதற்காக பலமாக படிப்பில் கவனம் செலுத்தி அதிக திறமையுள்ள மாணவனாகின்றான். சாதாரண குடும்பத்தில் பிறந்த பென் கம்பெலுக்கு 300,000 செலுத்தி ஹவார்ட் பாடசாலையில் சேர்வது கனவாகின்றது. ஆகவே அதற்காக ஒரு புலமைப் பரிசிலுக்கு முயற்சிக்கின்றான். ஆயினும் வித்தியாசமான வழமைக்கு மாறான ஒரு மாணவனுக்கு அந்த புலமைப்பரிசிலை வழங்கவே ஹவார்ட் நிர்வாகம் முயற்சிக்கின்றது.

இவனது கணித அறிவினால் கவரப்படும் மிக்கி ரோசா எனும் பேராசிரியர் இந்த மாணவனை ஒரு சிறிய 5 மாணவர்களைக் கொண்ட ஒரு கழகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். இந்த குழு மைக்கினால் வழி நடத்தப்படுவதுடன், சூதாட்டத்தில் பணம் செய்வதை நோக்காக கொண்டது. முதலில் மறுத்தாலும் ஹவார்ட் நுழைவுக்குத் தேவையான பணத்தை ஈட்ட இந்த கழகத்தில் பென் இணைந்து கொள்கின்றான்.

முதலில் ஹவார்ட் பணத்திற்காக லாஸ் வெகாஸ் சென்று சூதாடினாலும் (card counting at blackjack) நாளடைவில் சூதாட்டத்தில் அவன் மனம் ஒன்றி அதில் முழுக் கவனம் செலுத்துகின்றான். இவர்கள் 6 பேரும் சேர்ந்து பெரும் பணம் செய்கின்றனர். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் 50 வீதம் இவர்களை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பேராசிரியருக்கு கொடுக்க வேண்டும் என்பதே பேராசிரியரின் கட்டளை.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகச் சென்றாலும் பேராசிரியர் மைக்குடன் சச்சரவு ஏற்பட்டு பென் அந்த கழகத்தில் இருந்து நீக்கப்படுகின்றான். அத்துடன் அதுவரை அவன் தன் ஹவார்ட் படிப்பிற்காக சேர்த்திருந்த பணத்தையும் மைக் களவாடி விடுகின்றான்.

இதன் பின்னர்தான் கதையின் முக்கியமான நிகழ்வுகள் நடக்கின்றன. படத்தை நீங்கள் பார்த்து என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திரைப்படத்தில் லவ்ஸூ எல்லாம் இல்லையா என்று நீங்கள் கேட்பது கேட்கின்றது. அது இல்லாமலா? நிச்சயமாக இருக்கின்றது. பென்னிற்கு ஒரு காதலி கிடைக்கின்றார். அதே குளாமில் உள்ள ஒரு பெண்.

ஹவார்ட், MIT எல்லாம் எங்களுக்கு எட்டா உயரத்தில் உள்ள உலகத் தரத்திலான பல்கலைக் கழகம் அவற்றை திரைப்படத்திலாவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததே!!!

அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத, இறுதியில் மூக்கின் மேல் விரல் வைக்க தூண்டும் திரைப்படம்.

லேபிள்கள்:

ஹல்க் 2 திரையரங்குகளில்

Your Ad Here
அண்மையில் ஹல்க் 2 திரைப்படத்தைப் பார்த்தேன். அருமை. அளவிற்கு மிஞ்சி கோவப்படும்போது உருமாறி இராட்சதனாக மாறும் ஒரு மனிதனின் கதை!!!

ஹல்க் 2 விமர்சனம், விமர்சனம் தளத்தில் உள்ளது வாசித்து பயனடைக ;)

லேபிள்கள்: ,

திங்கள், ஜூன் 23, 2008

புதிய X-Files திரைப்படம் விரைவில்

Your Ad Here


இரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்-ஃபைல்ஸ் திரைப்படம் 25 ஜூலை, 2008 வெளியாக உள்ளது. அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற லெஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் போட்டுக் காட்டப்பட்டன.

அனைவரது விருப்பமான பாத்திரங்களான ஸ்களி, மேல்டர் ஆகிய இருவரும் இருக்கின்றனர். இரசிக உள்ளங்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

திரைப்பட தயாரிப்பாளர் காட்டர், இந்த திரைப்படம் வெற்றி அளித்தால் இரசிகர்கள் அடுத்த பாகத்தையும் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

லேபிள்கள்: ,

சனி, ஜூன் 21, 2008

சர்ச்சையைக் கிளப்பும் The Love Guru

Your Ad Here

இந்த படத்தில் இந்து மதக் குருக்களை கேவலமாக காட்டியுள்ளதாக சல சலப்பு எழுந்துள்ளது. ஆயினும் அனைத்து பிரைச்சனைகளையும் தாண்டி திரைப்படம் திரையிடப் பட்டுள்ளது.

இது போன்ற திரைப்படங்களால் இந்து மதத்தின் உண்மையான தோற்றம் மாற்றப்படுவதுடன், இந்து மதம் பிழையாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்து மத தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திரைப்படத்தைப் பார்த்த பலரும் திரைப்படம் அவ்வளவு நல்லாக இல்லை என்று கூறியுள்ளனர். Roger Ebert எனும் திரைவிமர்சகர் இந்த திரைக்கதையை கழிவறையில் எழுதுவதற்குத்தான் லாயக்கு என்றும் எழுதியுள்ளார்.

லேபிள்கள்:

வியாழன், ஜூன் 12, 2008

Indiana Jones and the Kingdom of the Crystal Skull விமர்சனம்

Your Ad Here
நேற்று கொழும்பு மஜஸ்டிக் சினிமாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன். கல கலவென ரஜனி திரைப்படம் பார்ப்பது போல இருந்தது. இக் கதை 1950 களில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. ரசிய இரகசிய உளவாளிகள் இந்தியானா ஜோன்ஸைப் பயன்படுத்தி அதிசய சக்தியை பெற முயல்கின்றனர். அவர்கள் அதைப் பெற்றார்களா இல்லையா என்பதுதான் மிகுதிக் கதை.

திரையரங்கில் ஒரே குழந்தைகளாக இருந்தது, குழந்தைகளுடன் குழந்தையாக நானும் இருந்து திரைப்படத்தைப் பார்த்தேன். காட்சிக்கு காட்சி விறு விறுப்பாக நகர்வதுடன், மிக முக்கியமாக கதிரை நுனியில் உட்கார வைக்கும் காட்சியில் கூட காமெடி கலந்து கலக்கியிருக்கிறார்கள்.

குடும்பமாக சென்று வார இறுதியில் பார்க்க நல்ல திரைப்படம் ஒன்றைத் தேடுகின்றீர்கள் என்றால், இந்த திரைப்படத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்.

லேபிள்கள்: