புதன், ஜூலை 30, 2008

Juno (2007) விமர்சனம்

Your Ad Here

தாய்மை என்பது அழகான ஒரு நிலை. பெண் தன் மொத்த வாழ்க்கைக் காலத்திலும் அழகாக இருப்பது இந்தத் தாய்மை அடையும் போதுதான் என்று சொல்வார்கள். இன்று ஜூனோ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். இந்த திரைப்படம் பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு 15 வயது மாணவியின் கதை.

தனது பாடசாலை நண்பனுடன் உடல் உறவு கொள்வதினால் கர்ப்பம் அடைகின்றார் ஜூனோ. ஆனாலும் கர்ப்பத்தைக் கலைத்துவிட முயற்சித்து மனம் ஒத்துக்கொள்ளாமல் விட்டுவிடுகின்றார். இந்த அழகான தாய்மைப் பருவம் வயது தப்பி வருவதனால் ஏற்படும் பிரைச்சனையை இந்த திரைப்படம் அழகாக விரசம் இல்லாமல் விபரிக்கின்றது.

எங்களூரில் காதலிப்பது தெரிந்தாலே தோலுரிக்க புறப்படும் பெற்றோர் மத்தியில், அமெரிக்கப் தந்தை தன் மகள் கர்ப்பம் என்பதை சிறு அதிர்ச்சியுடன் உள்வாங்கிக் கொள்கின்றார். அத்துடன் தன் மகளின் விருப்பத்துக்கிணங்க, மகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை ஒரு தம்பதியருக்கு கொடுப்பதற்கு உதவி செய்கின்றார்.

குழந்தையை பெற்றுக் கொள்ளும் தம்பதியர் முதலில் இதில் விருப்பமாக இருந்தாலும், கணவரின் கடைசி நேர குளப்படியால் ஒரே குளப்பமாகப் போய்விடுகின்றது. இப்போது ஜூனோவின் குழந்தையை யார் பெற்றுக்கொள்வர்??? நல்ல கேள்விதான, ஆனா திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தையின் உண்மைத் தந்தை, ஜூனொவின் பாடசாலை நண்பன் ஜூனொவை விட்டு வேறு ஒரு பெண்ணை வெளியே கூப்பிட்டதும் ஜூனோ அடையும் குளப்பம் அடையும் கோபம் ஏமாற்றம் எங்களையும் கலங்க வைக்கின்றது.

குடும்பங்களில் சரியான வயதில் பேசப்பட வேண்டிய விடையம் திரைப்படமாக உள்ளது. என்னைப் பெறுத்த வரையில் கட்டிளமைப் பருவத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். சில காட்சிகள் குடும்பத்துடன் பார்க்க அருவருப்பாக இருக்கலாம், ஆனால் இப்படி எங்கள் குடும்பத்தில் நடந்து குளம்புவதை விட திரைப்படத்தைப் போட்டுக் காட்டி விடுவதே நன்று.

திரைப்படம் பார்த்து முடிந்ததும் நல்ல திரைப்படம் ஒன்று பார்த்த நிறைவு கிடைத்தது. கதையின் நாயகி யாரையோ நினைவு படுத்திக்கொண்டேயிருந்தார்....

லேபிள்கள்:

செவ்வாய், ஜூலை 22, 2008

Batman நடிகர் சிறையில்

Your Ad Here

உலகெங்கும் வெளியாகி வெற்றி நடை போடும் Batman film, The Dark Knight இல் நடித்தவரான Bale பெலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஜரோப்பாவில் திரைப்படத்தை வெளியிட்டு சந்தைப் படுத்த சென்ற வேளையிலேயே இந்த கைது நிகழ்ந்துள்ளது.

குடும்ப உறுப்பினர் இருவரை தாக்கியதாக இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்பொது பொலீஸ் தடுப்பில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

லேபிள்கள்: ,

சனி, ஜூலை 19, 2008

Batman film "Dark Knight"

Your Ad Here

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்மான் திரைப்படம் அமெரிக்க திரையரங்குகளில் $18.5 million வசூலித்துள்ளது. இது ஒரு சாதனையாகப் பேசப்படுகின்றது. இந்த திரைப்படம் பட்மான் பிகின்ஸ் எனும் பாகத்தின் தொடர்ச்சியாக வருகின்றது.

தயாரிப்பிற்கு 180 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளனர். முந்திய பாகம் கிட்டத்தட்ட 372 மில்லியன் டாலர்களை வசூலித்திருப்பதால் இந்தப் பாகமும் சாதனை புரியும் என்று எதிர்பார்கப்படுகின்றது.

லேபிள்கள்:

செவ்வாய், ஜூலை 15, 2008

The Number 23 (2007) திரைவிமர்சனம்

Your Ad Here

எண்கள் வினோதமானவை. அவை மனிதனின் அபரிதமான வளர்ச்சியில் அரும்பங்காற்றின. எண்கள் இல்லாவிட்டால் இன்று பல கோட்பாடுகள் கொள்கைகள் இல்லாமலே போயிருக்கும். காட்டில் மனிதன் வேட்டையாடித் திரிந்திருப்பான். இவ்வாறு வினோத குணவியல்புகொண்ட இலக்கம் 23, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழ்த்தும் நிகழ்வுகளே இந்த 23 எனும் திரைப்படம்.

வோல்டர் ஸ்பரோவ் அவனது பெயர். இவன் தொழில் நகர்பகுதியில் கட்டாக்காலியாகத் திரியும் நாய்களை பிடிப்பது. இவனது பிறந்தநாள் அன்றும் இவ்வாறு ஒரு நாய் பின்னால் சென்று அதனால் நேரம் பிந்தி அவனது மனைவியை காணச் செல்கின்றான். இவன் வரும் நேரம் பிந்தியதால் இவன் மனைவி அந்த நேரத்தில் புத்தக கடையில் ஒரு பழைய புத்தகம் ஒன்றை வாங்குகின்றாள். இரத்த சுவப்பில் எழுதப்பட்ட ஒரு மர்ம நாவல் அது அந்த நாவலின் பெயர் 23.

இந்த நாவலைப் பெறும் ஸ்பரோவ் அதனை வாசிக்கத் தொடங்குகின்றான். வாசிக்கும் போது மெல்ல மெல்ல அது தன் கதை போல இருப்பதை உணர்கின்றான். இதனை தன் மனைவி, மகனிடம் சொல்கின்றான். ஆரம்பத்தில் அவர்கள் இவன் சொல்வதை அவ்வளவாக அசண்டை செய்யாவிட்டாலும். மெல்ல மெல்ல இவன் நடத்தையில் சந்தேகம் கொள்கின்றனர்.

இந்தப் புத்தகம் ஒரு கொலைகாரனைக் கண்டறிய உதவுகின்றது. அத்த்துடன் இந்தப் புத்தகம் ஒரு தற்கொலைக் கடிதம் என்பதையும் அறிகின்றனர். தற்கொலைக் கடிதத்தை நாவலாகப் பிரசவித்துவிட்டு ஒருவன் தற்கொலை செய்கின்றான்.

இதற்கு மேல் ஒரு வரி எழுதக்கூட எனக்கு விருப்பமில்லை. நீங்களே திரைப்படத்தைப் பாருங்கள். நிசத்தில் நடக்கும் கதை, நாவலில் வரும் கதை உண்மையில் நடந்த கதை என 3 கதைகள் திரைபடத்தினுள் உள்ளடங்கியுள்ளது.

மண்டையைப் பிய்த்து பிய்து சைக்கே திரில்லர் பார்க்க விருப்பம் என்றால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள். நிச்சயமாக ஒரு அருமையான திரைப்பட அனுபவம் கிடைக்கும்.

லேபிள்கள்:

திங்கள், ஜூலை 14, 2008

Hancock ஜ விஞ்சும் Hellboy

Your Ad Here
அமெரிக்காவில் ஹன்கொக் திரைப்படத்தின் வசூலை ($33m) ஹெல் போய் ($35.9m) விஞ்சியுள்ளது.

1 Hellboy II: The Golden Army - $35.9m
2 Hancock - $33m
3 Journey to the Center of the Earth - $20.6m
4 Wall-E - $18.5m
5 Wanted - $11.6m
Source: Media By Numbers



இதுவே தற்போதைய நிலை. 3டி திரைப்படமான ஜேர்னி ரு த சென்டர் ஓப் தி ஏர்த் எனும் திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டி வருகின்றது.

லேபிள்கள்:

நாராயணா.... தசாவதாரம் Vs The Forgotten

Your Ad Here




நாரதர் பாணியில்.. நாராயணா...!

லேபிள்கள்:

வெள்ளி, ஜூலை 11, 2008

Butterfly Effect விமர்சனம்

Your Ad Here

பட்டர்ஃபிளை எபெக்ட் என்றால் ஒரு சிறிய மாற்றமும் பெரிய ஒரு மாற்றத்தை தோற்றுவிக்க கூடிய தன்மை உடையது எனும் பொருள்பட உள்ளதை விக்கிப்பீடியா மூலம் அறிந்துகொண்டேன். அதாவது வண்ணாத்திப்பூச்சி பறக்கும் எபெக்டு பெரிய சுனாமிவரக் காரணம் ஆகலாமாம்... ஹி..ஹி..

இந்தப்பெயரில் அமைந்த திரைப்படம் பாகம் 1 மற்றும் பாகம் இரண்டு வெளிவந்துள்ளது விரைவில் பாகம் 3 வெளிவர உள்ளது.

அண்மையில் பாகம் ஒன்றை DVD இல் பார்க்க கிடைத்தது. அருமையான திரைப்படம். பார்த்து முடித்ததும் மனம் எல்லாம் கனமாகிவிட்டது. கதை இதுதான்... ...

ஒரு சிறுவனுக்கு அடிக்கடி அவனை சுற்றி நடப்பது மறந்துவிடுகின்றது. அதாவது, ஏதாவது ஒரு செயலைச் செய்ய தொடங்குவான் பின்னர் என்ன நடந்த்து என்பது அவனுக்குத் தெரியாது. உதாரணத்திற்கு ஒரு தடவை ஆசிரியர் படம் கீறச் சொல்கின்றார், படம் கீற ஆரம்பிப்பது மட்டுமே அவனுக்கு ஞாபகத்தில் இருக்கின்றது. சிறிது நேரத்தில் ஒருத்தன் பலரை கத்தியால் குத்திக் கொலை செய்தது போன்ற ஒரு படத்தை வரைந்திருந்தான். இது பற்றி அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய நிகழ்வு.

இது போன்ற நிகழ்வுகளில் ஞாபகம் தவறாது இருக்க, அன்றாடம் நடப்பவற்றை ஒரு குறிப்பாக எழுதிப்பேணி வருகின்றான்.

சிறிது காலம் கடந்து பல்கலை செல்லும் இந்தப் பெடியன் அங்கு ஒருநாள் சிறுவயதில் தான் எழுதிய நிகழ்வுகளை மீள எடுத்து வாசிக்கத் தொடங்குகின்றான். அதன் போது அவனுக்கு அனைத்தும் ஞாபகத்திற்கு வரத் தொடங்குகின்றது. அத்துடன் அந்த நிகழ்வு நடந்த பழைய காலத்திற்கு செல்ல கூடிய சக்தியும் ஏற்படுகின்றது. இந்த சக்தி மூலம் சிறுவயதில் நடந்த சில சில நிகழ்வுகளை இவன் மாற்றுகின்றான். சிறுவயதில் மாற்றிய சிறு நிகழ்வும் நிகழ்காலத்தில் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. அதாங்க பட்டர்ஃபிளை எபெட்டு.

இவனை சுற்றியுள்ளோருக்காக ஒவோரு தடவையும் இவன் பழைய காலத்திற்கு சென்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் போது அது நிகழ்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

ஹொலிவூட் காரர்கள் தமக்கே உரிய பாணியில் திரைப்படத்தை எடுத்துள்ளனர். அருமையான ஒரு Sci-fi திரைப்படம். இரண்டாம் பாகம் விரைவில் பார்க்க வேண்டும்.

லேபிள்கள்:

செவ்வாய், ஜூலை 08, 2008

வில் ஸ்மித்தின் Hancock (2008) திரையரங்குகளில்

Your Ad Here


பிரபல ஹொலிவூட் நடிகரான வில்ஸ்மித்தின் திரைப்படம் இப்போது உலகம் எங்கும் நல்ல வசூலை அள்ளிக்கொண்டிருக்கின்றன. கதை ஒரு அனுமாஷ்ய சக்தி படைத்த ஒருவரின் கதையாம். ஏற்றியும் தூற்றியும் திரைவிமர்சனங்கள் பல பக்கங்களால் வந்துகொண்டிருந்தாலும் வசூலில் கடும் சாதனையாம்.

திரைப்பட வரிசைப்படுத்தலில் அமெரிக்காவில் இந்த திரைப்படம் முதலில் உள்ளது. ஆனாலும் கடந்த வருடம் இந்நேரம் வெளியிடப்பட்ட ட்ராஸ்போமர்ஸ் திரைப்படத்திலும் பார்க்க இந்த திரைப்படம் குறைவாகவே வசூல் செய்துள்ளது.

லேபிள்கள்:

செவ்வாய், ஜூலை 01, 2008

Quantum of Solace - புதிய 007 திரைப்படம்

Your Ad Here

யுகேயில் அக்டோபர் 31ம் திகதி இந்த திரைப்படம் வெளியடப்படவுள்ளது. அமெரிக்காவிலும் உலகெங்கும் இதை தொடர்ந்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

திரைப்படத்திற்கான ட்ரெயிலர் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படமுன்னரே இணையத்தில் யூடியூப் போன்ற தளங்களில் வெளியாகிவிட்டது.

முந்தய பொண்ட் திரைப்படமான கசினோ ரோயலுடன் தொடர்புள்ளதாக இருப்பதுடன், விமானம், கார், விசைப்படகு என பல துரத்தல் காட்சிகளும் திரைப்படத்தில் இருப்பதை ட்ரெயிலர் ஊடாக காணக்கூடியதாக உள்ளது.

லேபிள்கள்: